பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

305

வானம் அவர்களுடைய சந்திப்பைத் தவிர்க்க வேண்டும் என்றே போயிருக்கிறாள் என்று புரிகிறது. எதிர் வீட்டிலிருந்து சாவி வாங்கி வந்து கதவைத் திறக்கிறாள்.

“வாங்க...வாங்க... அத்திம்பேர்...”

உள்ளே அவர்கள் வந்தமர்ந்ததும் அத்திம்பேர் சீனி வாசனிடம், “உடனே கூட்டிண்டு வந்துடுங்கோன்னு துடிச்சா ஸார்ர், எதோ ஒரு வார்த்தை சொன்னதுக்கு ரோசப் பட்டுண்டு, இப்படியா வர்மம் வச்சுப்பா? இவளைத் தோள்மேல் போட்டு வளர்த்தவன் ஸார், நான் !”

அத்திம்பேருக்குக் கண் கலங்குவதைக் கண்டு அவள் அதிசயிக்கிறாள். சீனிவாசன் உடனே, “ஸார்தான் மாம் பாக்கம் சுதந்திரக் கட்சி கன்வீனர். எனக்கே அவர் உங்க உறவுன்னு சொன்னதும் சர்பிரைஸா இருந்தது. நீங்க இப்ப பொம்பக் கிட்ட வந்துட்டேள்..” என்று விவரிக்கிறான்.

“அதென்னமோ, இத்தனை நாள் எப்படி எப்படியோ இருந்திருக்கலாம். இனிமேல் உன்னை இப்படி அநாதை போல் விடப்போறதில்லை.”

மைத்ரேயி உதட்டைக் கடித்துக் கொள்கிறாள். “எனக்கு எப்படியும் படிப்பை முடிக்கணும். இப்ப எங்கும் வரதுக்கில்லை...”

“என்னம்மா, படிப்பு, படிப்புன்னு நீங்க? உங்க புத்திக்கும் திறமைக்கும் பரீட்சை ஒரு பெரிய பிரமாதமா? பரீட்சையைப் பத்தின கவலையை விட்டுத்தள்ளுங்கோ. பிப்ரவரிக்கு மேலே மார்ச் இருக்கு. இந்த வருஷம் இல்லாட்டா அடுத்த வருஷம் ஊதித்தள்ளப் போறேள். அதைவிடப் பெரிய பொறுப்பை உங்களுக்குக் கொடுக்கப் போறோம் நாங்க...” என்று சீனிவாசன் புகழ்ச்சி வீணையை மீட்டி விடுகிறான்.

அதன் நாதத்தில் மாயம் இருக்கிறது.

“அதானே? எதற்கு நீ இங்கிருந்து பஸ்ஸில் காலேஜுக்கு போயிண்டு கஷ்டப்படணும் ?ஹாஸ்டலில் சேரலாம், இல்லாட்டா மட்றாஸில் உனக்காக ஒரு குடித்தனம் போட்டுடலாம்ன்னு அப்பவே சொல்லிட்டா உங்கக்கா.


ரோ.இ - 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/307&oldid=1100189" இலிருந்து மீள்விக்கப்பட்டது