பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

ரோஜா இதழ்கள்

எங்களுக்கு பிள்ளையா குட்டியா? உன்னைவிட்டு யாரிருக்கா? யாரோ வந்து உன்மேல் உரிமை வச்சிண்டு எதுக்கு அதிகாரம் பண்ணனும்?” என்று கேட்கிறார் அத்திம்பேர்.

மைத்ரேயி ஆத்திரத்துடன் இரண்டு சொற்கள் பேசுமுன் வாயிலில் ஞானம் வருவது தெரிகிறது. புன்னகையுடன் உள்ளே வந்து அமருகிறாள்.

“குழந்தையைக் கூட்டிண்டு போகலான்னு வந்திருக்கேன். உண்மையில் எனக்குப் பார்த்ததும்.” துண்டு நுனியால் அத்திம்பேர் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.

மைத்ரேயி ஆமாம், இல்லை என்று தலையை மட்டும் ஆட்டுகிறாள்.

“அதற்கென்ன, வீக் எண்ட்ல போய் இருந்துட்டு வாயேன்? எனக்கொண்ணும் ஆட்சேபம் இல்லே. கூட்டிண்டு போங்கோ...” என்று கூறுகிறார் ஞானம்.

அத்திம்பேர் வெடுக்கென்று, “யாருக்கு யார் ஆட்சேபம் சொல்றது? நான் இப்பவே கூட்டிண்டு போகலேன்னா அவ என்னை இருக்கவிட மாட்டா!” என்று உறுதியாகக் கூறுகிறார்.

“நான் நாளைக்கு சாயங்காலம் வரேன் அத்திம்பேர், நிச்சயமாக. மிஸ்டர் சீனிவாசன், எனக்குப் பேச்சுத்திறன், மற்றும் சில தகுதிகள் இருக்கலாம். அதை வைத்துக்கொண்டு கட்சிக்கு ஏதேனும் நன்மை தேடலாம் என்று நீங்கள் விரும்புவதிலும் தவறில்லை. ஆனால் நான் உங்கள் கட்சியில் ஒட்டி நிற்பேன் என்று மட்டும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது.”

“நீங்க என்ன சொல்றேள்னே புரியலே.”

“நான் ஒட்டாமல் நின்று தராதரம் பார்க்கணும்னு ஆசைப்படுவதை நீங்கள் வெட்டிவிடக் கூடாது. நான் உங்களுக்காக உங்கள் கட்சிக்காகப் பேசலாம் என்றே நினைக்கிறேன். தார்மீகம் என்று சில கொள்கைகளில் நீங்க சாய்வதாலும் நான் பிறந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மை பெற்றிருப்பதாலும் அந்தக் கட்சியில் சிலரேனும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/308&oldid=1101386" இலிருந்து மீள்விக்கப்பட்டது