பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

307

நினைப்பதால் நிச்சயமாக என் ஒத்துழைப்பைத் தருகிறேன். ஆனால் அதற்காக என்னை விலைக்கு வாங்குவதாக மட்டும் எங்கள் நினைக்கக்கூடாது.”

ஞானம் அவளுடைய பேச்சைக் கேட்டு வியப்படைகிறாள்.

“ஏனம்மா, இப்படி எல்லாம் தப்பாக நீங்க நினைக்கிறேள்? அப்படி யாரும் யாரையும் விலைக்கு வாங்க முடியாது உங்க ஒத்துழைப்பைக் கொடுப்பதாகச் சொல்றேளே, அதுவே சந்தோஷம். அப்ப, நாளைக்குக் கார் கொண்டு வரட்டுமா! நீங்க மாம்பாக்கம் போகலாம்; அப்படியே ஒரு ப்ரோக்ராம் போட்டுக்கலாம்?”

“நான் இப்பவே கூட்டிண்டு போலான்னு வந்தேன்..”

“இல்லே அத்திம்பேர். நாளைக்கழிச்சு மறுநாள் காலமே பஸ் ஏறி மாம்பாக்கத்துக்குச் சாப்பிடவே வந்துவிடுகிறேன். காரொண்ணும் வேண்டாம். நீங்கள் அங்கே வந்து விடுங்கள் சீனிவாசன்-முடியுமா?”

“நான் காலமே இங்கேயே வண்டி எடுத்திண்டு வந்துடறேன். எனக்கென்ன சிரமம். ஒண்ணுமில்ல...”

“வண்டி எல்லாம் வேண்டான்னா கேக்கமாட்டீங்க போலிருக்கு!” என்று முணுமுணுக்கிறாள் மைத்ரேயி.

அவர்கள் விடைபெற்றுக்கொண்டு செல்கின்றனர்.


20

தெருவில் போகும் மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு, கால்வாய் பாலத்தின் மீது உட்காரும் சமாசாரம் வேல்சாமி நாய்க்கருக்குப் பிடிக்காததொன்று. என்றாலும் அன்று மனமில்லாமல், வயிற்றெரிச்சலுடன் உட்கார்ந்து எதிரே மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எங்கு பார்த்தாலும் கறுப்பு சிவப்புத் தோரணங்கள்; ஆங்காங்கு நட்சத்திர இணைப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/309&oldid=1115401" இலிருந்து மீள்விக்கப்பட்டது