பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

ரோஜா இதழ்கள்

கள். ஒலி பெருக்கி மைத்ரேயியின் குரலை நாலாபுறங்களிலும் பரப்பிக் கொண்டிருக்கிறது.

“நீங்கள் யோசனை செய்து பாருங்கள்! பதினேழு ஆண்டு ஆட்சியில் சுய தேவைத் திட்டம், நிறைவேறியதா? இல்லை. கோடி கோடியாகச் செலவு செய்து திட்டங்கள் தீட்டிச் செயலாற்றினார்கள். முக்கியமாக அடிப்படைத் தேவை உணவு. அது கிடைத்திருக்கிறதா இன்று, இல்லை.”

அந்தக் குரல் ஒவ்வொன்றாய் அடுக்கும்போது வேல்சாமியின் அடி நெஞ்சிலிருந்து கிளர்ந்து வரும் ஆத்திரம் விருவிரென்று நடந்து சென்று அந்த ஒலிபெருக்கியைப் பிடுங்கி எறிந்துவிடத் துண்டுகிறது. மேல்துண்டை உதறிப் போட்டுக்கொண்டு விடுவிடென்று, சாலையில் நடக்கிறார். பெரிய பெரிய சுவரொட்டிகளில் ‘செல்வி மைத்ரேயி பேசுவார்’ என்று பெயர் விளங்குகிறது. பார்த்தாலும், கேட்டாலும் ஐயமார் குலப்பெண்ணாகத் தோன்றுகிறது. சின்னஞ் சிறிசு.

அதன் முகத்தைப் பார்த்துக்கொண்டு, கேட்டுக் கொண்டு... சை...!

ஏணிப்படி எல்லாரும் புத்திக்கெட்டுப் போனார்கள்?

சாலை கிழக்கும் மேற்குமாக நெடுஞ்சாலையாக விரித்து விரித்து ஊர்ப் புடவைகளை எல்லாம் போட்டாலும் கண்ணுக் கெட்டிய தொலைவுக்குக் கால்வாசி தீராத சாலையாக, ராஜபாட்டையாக ஓடுகிறது.

“இந்தக் கூத்துப்பயலுக,தெக்கு தேயுது, தேயுதுன்னு கத்துறானுகளே, தேஞ்சா கிடக்குது? இம்மாம் பெரிய ரோடில கம்பத்துக்குக் கம்பம் வாழைத்தண்டு விளக்குப் போட்டு வச்சது யாரு? இந்த ரோட்டழகு பதினைஞ்சு வருசம் முன்னே இருந்ததா? இங்கிலீசுகாரனா இதெல்லாம் போட்டுவச்சான்... ?”

சாலை ஊரோரத்தைத் தாண்டி இருபுறமும் திறந்த வெளிகளைக் காட்டிக் கொண்டு செல்கிறது. கீற்றுக் கொட்டகை, சினிமாவுக்கு வண்ண வண்ணங்களாய்த் திரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/310&oldid=1101391" இலிருந்து மீள்விக்கப்பட்டது