பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

ரோஜா இதழ்கள்

அடித்துப் பிடித்துக் கொண்டு கூட்டம் உள்ளே அடைபடுகிறது. ஆனால் இன்னும் மக்கள் சாரி சாரியாக வருவது குறையவில்லை.

அடுத்த ஆட்டத்துக்குக் காத்து நிற்கின்றனர். தேநீர்க் கடை நாயருக்கு வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கிறது.

அப்போது டிக்கெட் கொடுக்கும் குடிசையிலிருந்து தங்கவேலு வருகிறான். சில்க் சட்டை என்ன, கைக்கடியாரமென்ன, டால் வீசும் மோதிரமென்ன, கருவேப்பிலைக்குச்சி போலிருந்த பயல் எப்படியாகிவிட்டான்!

“அட, வேல்சாமி மாமாவா? ஏன் இங்கே நிக்கறீங்க, எப்ப வந்தாப்பலே மாமா ?”

“முந்தாநாதான், நாயகியப் பார்த்திட்டுப் போகலான்னு வந்தேன். டேயப்பாடி, இந்த ஊரு எப்படீயாயிட்டது! சினிமாக்கொட்டாய்ல்ல துட்டுச் சேருதுபோலிருக்குது...?”

“பரவாயில்ல, படம் பாக்கிறீங்களா, மாமா ?”

“நெல்லாருக்குமா ?”

“கூட்டம் பாத்தீங்கல்ல? மொத்த ஜனமும்அவன் படம், பேச்சு, பாட்டுன்னா மயங்கிப் போகுது, போயிப்பாருங்க...”

தங்கவேலு அவரை உள்ளே அழைத்துச் செல்கிறான். ஒரு பையன், டிக்கெட் அறையிலிருந்து மடக்கு நாற்காலியைக் கொண்டு வந்து உள்ளே போடுகிறான். வேல்சாமிக்குப் பெருமையாக இருக்கிறது. மரியாதை தெரிந்த பையன் என்று நினைத்துக் கொள்கிறார்.

திரையிலே மிகப்பழைய செய்திப்படத்தைக் காட்டுகிறார்கள். நேருவும் அவர் மகளும் இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்த படம்.

அந்த வடிவைப் பார்க்கும்போது, அந்த எளிய கிராமத்து மனிதர் மெய்மறந்து போகிறார். என்ன கம்பீரம் ! என்ன கனிவு! பால் வடியும் எளிமை. சிரிப்புக்கு உலகையே கொள்ளை கொள்ளும் கவர்ச்சி. செல்லுமிடங்களிலெல்லாம் மக்கள் ரோஜாச் செண்டுகளை வீசுகிறார்கள். மலர்மாரி பொழிகிறார்கள். லட்சோப லட்சமாய் மக்கள்... எங்கோ வடநாட்டுப் பிராமண குலத்தில் பிறந்தவர் என்றா தோன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/312&oldid=1101394" இலிருந்து மீள்விக்கப்பட்டது