பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

311

கிறது? ஆதிக்கம் செய்ய வந்த ஆரியர் என்றா தோன்றுகிறது? நேரு என்றால் இந்தியா. இந்தியா அவர் பிறந்தமண். கொடானு கோடி மக்களின் வெவ்வேறு தன்மைகளை ஒன்று சொ்க்கும் ஒரு சக்தி; ஒரு அழகு வடிவம்; ஒரு வசீகரப் புன்னகை, ஒரு மந்திரக் குரல்.

அவர் கங்கைக் கரையைப் பார்த்ததில்லை. ஆனால் இருகரைபெருக வரும் காவிரியே சோறூட்டி வளர்த்த அன்னை கங்கையம்மன் பூசை என்று அவளைத்தான் கும்பிடுவார்கள். அவள் ஊழித்தாயாகத் தாண்டவம் ஆடினாலும் எல்லையற்ற கருணை அவளுடைய வடிவம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவர் பிறந்த பொம்ம சமுத்திரம் கிராமரம் இன்று இல்லை. மேட்டூர் அணை கட்டியபோது, காவிரி அந்தக் கிராமத்தை நிரந்தரமாகத் தனதாக்கிக் கொண்டாள். ஆனால் என்ன? மக்களுக்கு அவள் பெரு நிதியங்களை வாரி வழங்குகிறாளே? ஒளி வெள்ளங்களாய் விளக்குகள்; பக்கத்துக்குப் பக்கம் தொழிற்சாலைகள். நாளெல்லாம் மாக்கல்லைக் குடைந்து இரண்டு கற்சட்டிகளைச் செய்து கொண்டுபோய் ஐயமார் வீடுகளில் கொடுத்தால் நாலணா கிடைக்கும். இரண்டு மரக்கால் கொராளி கிடைக்கும். அதை ஏழு தடவை குற்றிப் புடைத்துச் சோறாக்கிய பெண்களுக்கு என்ன சுகம் இருந்தது? அவர் பிறந்த கிராமம் அழிந்து விடவில்லை. அது கொழிக்கிறது. அதன் உயிர்த் தன்மை , நாடு முழுவதும் பூந்துளிகளாய் பரவி அதன் புகழ் பரப்புகிறது. அதன் ஒளி இங்கும் வருகிறது. இந்தக் கொட்ட கையில் நேருவின் பால் வடியும் முகத்தைப் பார்க்கிறார்.

பெரிய பூச்செண்டைக் காட்டி, நேருவின் இந்தோனிசிய விஜயத்தைத் திரையில் நிறைவு செய்கின்றனர்.

வேல்சாமி பெருமூச்சு விடுகையில் பாட்டுடன் இசைக் கருவிகளும் செவிகளைத் துளைக்க, மேகநாட்டு இளவரசி படம் தொடங்குகிறது.

இளம்பரிதி பிக்சர்ஸாரின் மேகநாட்டு இளவரசி!

அரைக்கச்சும் முகமூடியும் கையில் வாளுமாக ஒரு கொள்ளைக்காரன் குதிரையில் பாய்ந்து பறக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/313&oldid=1100828" இலிருந்து மீள்விக்கப்பட்டது