பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

ரோஜா இதழ்கள்

“சிங்கம் உக்காந்த எடத்தில இந்த நரிப்பசங்க உக்காருவாங்களா ?”

“தள்ளாடிய காளைமாடுன்னு அந்த நேத்துப் பொண்ணு கிண்டல் பண்ணுது அண்ணாச்சி!”

“அந்தப் பொட்டைக் குட்டியை அலாக்கத் தூக்கியாந்துடனும். அந்தையனை எந்திரிக்கவொட்டாம. அடிக்கணும்...”

வேல்சாமிக்கு நெஞ்சில் முள் குத்துவதுபோலிருக்கிறது. இது எதிர்க்கட்சி வினையா, அல்லது, கொழுத்துப்போன குண்டர்களின் தனிச் செயலா?

“யோவ், யாரையா அங்கே நிக்கிறது?” என்று நிழலோடு நிற்கும் வேல்சாமியை நோக்கிப் பையன் கூவுகிறான்.

“ஒரு சிங்கில் கேட்டேன்...”

“ஏன் அங்கிட்டு இருட்டில போயி நிக்கிறே?...” என்று அதட்டிவிட்டு அவன் தலையை உள்ளே இழுத்துக் கொள்கிறான்.

வேல்சாமி கடையின் முன் வந்து நிற்கிறார்.


21

விரைந்துயரும் விசையை அமுக்கிவிட்டபின் நடுவில் நிறுத்துவதற்கில்லை. ஏதோ ஒரு விசை புகுந்து அவளுடைய வாழ்வுச் சக்கரத்தை இயக்குவதாக மைத்ரேயிக்குத் தோன்றுகிறது. சூறாவளிச் சுற்றுப்பிரயாணம். கூட்டுக் கொடிகள் பறக்கும் கார்களில் பூமாலைகள் துவைபடுவதுபோல், கற்களும் ஒவ்வொரு கூட்டத்தில் வந்து விழுகின்றன. போலீசு கெடுபிடி செய்யும். கார்க் கண்ணாடிகள் உடைவது சகஜமாகிறது. வசைமாரிகள், வாய்ப் பந்தல்களைக் கேட்டுக் கேட்டுக் காதுகள் புளிக்கின்றன. ஒரே மாலையில் நாலைந்து கூட்டங்கள். லோகாவின் தொகுதியில் இரவு பகல் ஓய்வு ஒழிதலின்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/316&oldid=1115405" இலிருந்து மீள்விக்கப்பட்டது