பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

ரோஜா இதழ்கள்

பொதுக்கூட்ட முகங்களில் குறிப்பாக எந்த முகம்தான் நினைவில் தங்குகிறது ?

வண்டி காஞ்சீபுரம் சாலையில் செல்வதாக அவள் நம்புகிறாள்.

“ஏன் பெரியவரே, வண்டி...நம்மவீட்டுக்குத்தானே போகிறது ?”

“தோட்ட பங்களாவுக்குத்தான் போகுது. முன்னமே சொன்னேனே ? ஏன் சும்மா கேக்கிறே?”

தோட்ட பங்களா...மாம்பாக்கம் வீட்டை அப்படிக் குறிப்பிடுகிறான் என்று அவள் நம்புகிறாள். இந்த ஒருமாச காலமாக அவள் இரவு அங்கேதான் அநேகமாகத் தங்க வருகிறாள்.

பளிச்சென்று சாலை விளக்குகள் வந்து போகின்றன. மின்சாரக் கிளை நிலையம் ஒன்று போகிறது.

இது...எந்த ஊர்?

தென்னமரச் சோலையிடையே புகுந்து ஒரு வீட்டின் முன் வண்டி நிற்கிறது. கிழவன் இறங்கி கதவைத் திறக்கிறான்.

“எறங்கு!”

“ஏம்பா? நம்ம வீடு இதுவா? எங்க வீட்டுக்குக் கொண்டு போறேன்னில்ல நினைச்சேன்? எனக்குஇப்ப இங்கு வரதுக் கில்ல...” என்று வண்டியை விட்டிறங்க மறுக்கிறாள்.

“அது சர்த்தாம்மா நான் வயசானவன் சொல்றேன் ? வம்புதும்பு செய்யாம எறங்கிவா. இங்கேதான் அந்தையரும் வருவாரு. கையாலாகாத சோமாரிப்பயலுவ கடத்திட்டுப் போகத்திட்டம் போட்டிருந்தாங்க. நீ எறங்கிவா சொல்றேன்...”

பனிக்கட்டி அடித்தொண்டையில் சிக்கிக்கொண்டாற் போல் அவள் விழிக்கிறாள்.

இறங்குவதைத் தவிர வேறுவழியில்லை. வீட்டின் முன் வாயிலில் விளக்கு இல்லை. பக்கத்தில் வண்டி செல்லு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/320&oldid=1100806" இலிருந்து மீள்விக்கப்பட்டது