பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

321

விட்டுட்டு உன்றசோலியைப் பார்த்துகிட்டுப்போ. காங்கிரசை இங்கே அசைக்க முடியாது. இப்பப்பாரு, நான் வண்டி யிலேறுன்னு அதட்டினேன். நீ ஏறிட்டே. இந்த அளவுக்குக் கூட உன்னக் காப்பாத்திக்கத் தெரியாத நீ, மேடைலே ஏறி அம்மாம் பெரிய மலையை அசைக்கப் பார்க்கிறே, கிழட்டு மாடுன்னு கேலிபண்ணுறேல்ல? நீ இத்தோட இந்த வழிக்கு வாதில்லேன்னு இப்ப ஏங்கிட்ட கையடிச்சுக் குடுத்துட்டு விட்டோட போயிடணும். இல்லாட்டி என்ன நடக்கும்னு எனக்குத் தெரியாது.”

தான் ஒருத்தி மேடையில் ஏறிப் பேசுவதால் மக்களுடைய சக்தி சிதைந்து போவதாக இந்தக் கிழவன் அஞ்சுவது கண்டு அவள் ஓர்புறம் தன்னம்பிக்கை கொண்டு மகிழ்ந் தாலும், பொறியில் சிக்கிய நிலை அவள் முன் இருள் கிடங்காக அச்சுறுத்துகிறது.

மூடத்தனமோ, எதுவோ, கிழவன் ஊறி ஒன்றிப்போன பழைய மண். அவனை அசைக்கமுடியாது; கோட்டைவிட்டு மாறமாட்டான் என்று புரிந்துகொள்கிறாள். ஆனால் அவள் அவனிடம் இனி மேடை ஏறவில்லை என்று வாக்குக் கொடுப்பதற்காகவா இவ்வளவு தீவிரமாக இறங்கினாள்? இவ்வளவு தானா உன் ஆற்றல்? என்று அறிவு இடிப்பதுபோல் தோன்று கிறது. தன்னைப்பற்றிய ஒரு பெருமையான உணர்வுக்கே அது இழுக்கு என்று நம்புகிறாள்.

“உனக்குத் தெரியாது. திருட்டுக் கள்ளைக் குடிச்சிட்டுக் கேவலமா உன்னைப் பத்திப் பேசுறானுவ அத்தெ நினைச்சிப் பாரு. அந்த அசிங்கமெல்லாம் உனுக்கு வேணுமா ?”

“ஒரு நல்லது செய்யணும்னு வந்தால் நாலுபேர் நாலு சொல்லத்தான் சொல்லுவாங்க. வெட்ட வெளியில் வந்து நின்னா அப்படித்தான் புழுதிக் காத்தடிக்கும்; மழையும் பெய்யும். அதற்காக நல்லதுன்னு தோணுவதைச் செய்யா மலிருக்க முடியுமா ?”

“உனக்கு நெல்லது பொல்லாதது என்ன தெரியும்? நீ காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீங்கன்னு சொல்லிக்கிட்டுத்

ரோஇ - 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/323&oldid=1100057" இலிருந்து மீள்விக்கப்பட்டது