பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

323

நகரும தகைமையினாலும் வளர்ந்த ஸ்தாபனத்தின் முகதிரையைப் போட்டுக்கொண்டு எத்தகைய ஈனமான செயல்களைச் செய்கிறார்கள்!

சீனிவாசனையோ, அழகியமணவாளனையோ, அத்திம் பயையோ, அக்காவையோ நினைத்துப் பார்க்க இயலாதபடி கானைப் பற்றிய திகிலில் அவள் நடுங்குகிறாள். எவரேனும் நான்கு முரடர்கள் வந்து கதவைத் திறந்து.

பெண்ணாய்ப் பிறந்ததன் பலவீனத்தை இதற்குமுன் அவள் எப்போதும் இப்படி உணர்ந்ததில்லை.

ஒரு ஆண் இதே நிலையில் அகப்பட்டுக் கொண்டி ருந்தால் கொன்றுவிடுவார்களோ, என்று மட்டும்தான் அஞ்சுவான்.

இது...கொலைக்குமேல்.

அப்படி ஏதேனும் நடந்துவிடுமானால்... நடந்து விடுமானால்...

நெஞ்சுலர்ந்து போகிறது; சிந்திக்கச் சக்தி இல்லை.

அவன் கேட்ட வாக்குறுதியை அவள் கொடுத்திருக்க மாட்டாளா ?

ஞானம்மா...!

உங்கள் கருத்து எவ்வளவு சரியாகப் பலித்திருக்கிறது!

ஒரு பெண் தன்னிடமுள்ள விலைமதிக்கவொண்ணாத பெண்மைக்காக எப்போதும் பாதுகாப்பை நாடவேண்டி யிருப்பதனாலேயே பலவீனமுடையவளாகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளாத மட்டியாக இருந்தாளே!

பொதுக் கூட்டங்களுக்குச் செல்கையில் எத்தனை ஆண்கள் அவளைச் சூழ்ந்துகொள்வார்கள்! வேதகிரி, சுப்புசாமி, கிருஷ்ணமூர்த்தி, வைத்தியநாதன், எல்லோரும் அவளுடைய இனத்தைச் சேர்ந்த ஆடவர்கள்தாம். அவர்களில் ஒருவர்கூட அவளுக்குப் பத்திரமாக உதவவில்லையே! கீழ்த்தரமான உணர்வுகளெல்லாம் கட்டவிழ்ந்து விடக்கூடிய நாட்களில் இத்தகைய சந்தர்ப்பங்களின் அபாயத்தை உணர்ந்து ஒருவன்கூட அவளுக்கு மெய்க்காவலாக இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/325&oldid=1100070" இலிருந்து மீள்விக்கப்பட்டது