பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

ரோஜா இதழ்கள்

வில்லையே! ஏன், அத்திம்பேர் அவளுக்கு அப்படி இருந்திருக்கக்கூடாதா? அந்தக் கூட்டத்துக்கு அவர் வரவேயில்லை. ஆஸ்த்மா தொந்தரவினால் அவதிப்படுகிறாராம். கோழைகள்! பிறர் முகத்தில்சேற்றை வீசுகிறோமே என்ற உணர்வின்றி வீசிய அழகிய மணவாளனுக்கு என்ன ஆயிற்று? கைகால் முகத்தில் அடிபட்டிருக்கும். நாளையே பிளாஸ்திரியை ஒட்டிக் கொண்டு தேர்தல் சாவடியில் வந்து நிற்பானாக இருக்கும்.

அவள்.

திகில் குழி பறிக்கும்போது, பசித்தீயும் கிளர்ந்தெரிகிறது.

மணி பத்திருக்குமோ, பதினொன்றிருக்குமோ?

அன்று பகல் குடியாத்தத்தில் ஓட்டலிலிருந்து சாப்பாடு தருவித்து வைத்திருந்தார்கள். அது ஒரே காரமாக இருந்ததுபிறகு மாலையில் எங்கோ வழி நடையில் சிற்றுண்டி. அதுவும் ஒரே பச்சை மிளகாய் மயமாக இருந்தது. அதை விழுங்கி வைத்தாள். இப்போது வயிறு நெஞ்சு எல்லாம் எரிகிறது. அவமானம் நேர்ந்துவிட்டால் பிறகு அவளால் உயிரோடு தலைதுாக்க முடியுமா?

ஆண்டவனே! இதுபோல் மேல்நாட்டுப் பெண் எவளுக்கேனும் நேர்ந்தால் மீண்டுவந்து வழக்காடி நியாயம் கேட்பாள். தவறிழைத்தவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பாள். ஒரு கலக்குக் கலக்குவாள்.

அவளுக்கு அத்தகைய தெம்பு இருக்கிறதா?

நிரூபிக்க உண்மை கூறினால் அது அவமானமாகும் என்று அமுக்கிவைப்பதுதான் இங்கே அதிகம்.

ஆண்டவனே! அவ்விதம் ஏதும் நேராமலிருக்கட்டும். அவள் நியாயத்துக்காகவே போராடுகிறாள். பண்புக் குறைவான எந்தச் செயலையும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை.

எங்கோ விளக்குப் போடுவதுபோல் ஓர் உணர்வு தோன்றுகிறது. கிழவனாக இருக்குமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/326&oldid=1100082" இலிருந்து மீள்விக்கப்பட்டது