பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

329

“இளைஞர் கருத்துக்களெல்லாம் முற்போக்கு அரசியல் கட்சிகளில் ஈடுபாடு கொள்வதுதான் இயல்பு. நீங்கள் எப்படி ராஜா, ராணி என்று பழைய பத்தாம் பசலிக் கொள்கைக் கட்சியில் சேர்ந்தீர்கள்? நீங்கள் இங்கே பக்கத்துப் பள்ளிக் கூடத்துக்குமுன் உள்ள மைதானத்தில் பேசினீர்கள். இங்கே தலைமேல் அடித்தாற்போல் ஒலிபெருக்கியைத் திருப்பி வைத்துவிட்டார்கள். நான் கேட்டேன். அப்போது உங்களைக் கூட்டத்தில் நின்றே பார்த்தேன். என்னால் ஒப்ப முடிய வில்லை.”

மைத்ரேயி புன்னகை செய்கிறாள்.

“நான் இந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டேன் என்று யார் சொன்னார்கள் !”

“இதுவும் ஒரு அரசியல் விநோதமா? பின் மேடையேறி அந்தக் கட்சிக்காக வாக்காளரை இழுக்கிறீர்களே?”

“உண்மைதான். ஆனால், ராஜமானியம் போன்ற விஷயங்களை நான் மறந்தும்கூடப் பேசமாட்டேனே ? நான் இப்போது முற்றிலும் கூலிப் பேச்சாளிதான். முதலில் ஏதோ உற்சாகத்துடன் இறங்கினேன். ஆனால் இதில் பணமும் சம்பாதிக்கலாம் என்று போகத் போகத் தெரிந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் வசதியான பங்களாவில் நல்ல செல்வாக்குக் குடும்பத்தில் செல்வாக்கான சாதியிலும் இருப்பதால் பணத்துக்காகப் பேசலாமா என்று கேட்கக் கூடும். இங்கு பெரும்பான்மை மக்கள் போராட்டத்துக்கும் கோஷங் களுக்கும் ஏன் வருகிறார்கள்? அது சில நாட்களுக்குச் சோறு போடுகிறது; காபி வாங்கிக் கொடுக்கிறது. நானும் ஒன்றும் இரண்டாயிரம் வயிரமும் பட்டும் வாங்கிக் கொள்வதற்காக சேர்க்கவில்லை. என்னுடைய எத்தனையோ சோதரர் பிழைக்க வழியின்றி சமுதாயத்தின் கண்களில் கேலிப் பொருள்களாய் உலவுவதைத் தடுக்க நான் பொருள் சேர்க்கிறேன். மேற்குலத்தில் பிறந்தாயா? உனக்குக் கல்வித்துறையின் வாயிலை அடைத்துவிடுவோம். உனக்குத் தொழில் துறையில் சலுகை கிடையாது. உனக்கு ஒன்றுமேயில்லை என்று சொல்லாமல் சொல்லும் அரசை நாங்கள் நம்பிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/331&oldid=1100116" இலிருந்து மீள்விக்கப்பட்டது