பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

ரோஜா இதழ்கள்

பயனில்லை. நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். எங்கள் நிலையை உங்களால் புரிந்துகொள்ள முடியாது!”

“நீங்கள் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. உங்களை வெளிப்படையாக வெறுத்த கட்சியுடன் இன்று குலாவுவது எவ்வளவு கேலிக்கிடமாக இருக்கிறது என்பதை அறிவீர்களா?”

“அறிவேன். ஆனாலும் அவர்கள் வெறுத்ததை ஒப்புக் கொண்டு இப்போது பிளவைச் சரிசெய்து கொள்ள வருகிறார்கள். ஆனால் ஆளும் கட்சியினர் வெறுப்பில்லை என்று கொள்கையளவில் சொல்கிறார்களே ஒழிய, திறமைக்கு மதிப்பில்லை என்று நாங்கள் ஒதுக்கப்பட்டுப் பசுமை இழந்து சமுதாயத்தின் வண்மையான கிளைகளிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை...”

“எனக்கென்னமோ இந்த ஓட்டு எந்த அளவுக்கு இணைந்து உங்களுக்குப் பயன் தரும் என்பது புரியவில்லை.” “நான் ஒன்று உங்களைக் கேட்கட்டுமா? வழிவழியாக அரசியலில் ஈடுபாடு கொண்ட குடும்பத்தில் வந்த நீங்கள் ஏன் அரசியல் கட்சிகளைவிட்டு ஒதுங்கி இருப்பதாகச் சொல் கிறீர்கள்? உங்களைப் போன்ற இளைஞர்கள் ஏன் சொந்த நாட்டில் வெறுப்புக் கொண்டு மேல்நாட்டுப் பித்துபிடித்துப் போக வேண்டும்? அது இந்நாட்டுக்குப் பெரிய இழப் பல்லவா ?”

“அரசியலா? இந்நாட்டு அரசியல் கட்சிகளைப் பற்றி எனக்கு ஒரு தீவிரமான கருத்துத் தோன்றுகிறது. இந் நாட்டுக்கு ஒரு சரியான சர்வாதிகாரி வரவேண்டும். அவன் அத்தனை அரசியல் கட்சிகளையும் ஒழித்துவிட்டுக் கையில் சவுக்கெடுத்துக்கொண்டு அவனவன் வேலையைச் செய்ய வைக்கவேண்டும். மீறி அரசியல் என்று பேச வருபவர்களை வரிசையாக நிற்க வைத்துச் சுட்டு விடலாம்...”

கடைசியாக அவன் கூறிய சொற்கள் அவளுக்குச் சிரிப்பை வரவழைக்கின்றன.

“பின்னே பாருங்களேன்? வானொலின்னு சொல்ல ஒரு போராட்டமாம். கல்லூரிக்குப் பேர் வைக்க ஒருபோராட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/332&oldid=1101418" இலிருந்து மீள்விக்கப்பட்டது