பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

331

மாம். கத்திரிக்காயைக் கத்திரிக்காய் என்று சொல்ல ஒரு போராட்டமாம். ஸில்லியா இல்லை? இளைஞர்களெல்லாம் இப்படியா அரசியல் வாதிகளின் வலையில் வீழ்வார்கள்? அரசியல்வாதிகள் தங்கள் சுய நலன்களுக்கு இளைஞரின் சக்தியை விரயமாக்குகிறார்கள். இந்நாடு என்று உலக நாடு களுக்குச்சமமாகத் தொழிலிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணப்போகிறது, எல்லாத் துறைகளிலும் அரசியல்வாதிகள் புகுந்து குட்டிச்சுவராக்குகிறார்கள். இந்தி வேண்டாம்; இங்கிலீஷ் வேண்டாம். ஒருதலைமுறையையே குட்டிச்சுவராக்க ஒழிகக் கோஷங்கள். ஏன் உங்களைப் போன்ற படித்தவர்கள் சுயமாகச் சிந்திக்கும் தன்மையை இழக்கிறீர்கள் என்பது எனக்கு விந்தையாக இருக்கிறது. வரவர உலகம் குறுகி வருகிறது. அதிவிரைவுப் போக்குவரத்துச் சாதனங்களால் எத்தனைக்கெத்தனை மொழிகள் தெரிகின்றனவோ அத்தனைக்கு அறிவு விசாலமாகிறது; வேலை வாய்ப்புக்கள் பெருகுகின்றன. இப்படி முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு கிணற்றுத் தவளைகளாக இருப் பதற்காகவா சுயராஜ்யம்? இரண்டாம் மகாயுத்தத்தில் தரை மட்டமாகிப் போன ருஷியாவும் ஜப்பானும் ஜர்மனியும் இன்று எப்படி மகோன்னத நிலைக்கு வந்திருக்கின்றன: நிச்சயமாக ஒழிக. அழிகக் கோஷம் போட்டு வரவில்லை.”

அவனுடைய தாக்குதல்கள், அவள் பேசும்சார்புக் கட்சியை நோக்கியே பாய்கின்றன என்பதை அவள் தெரிந்து கொள்ளாமல் இல்லை.

“இளைஞர் சமுதாயத்தை அதற்காக நீங்கள் குற்றம் சாட்டுவது சரியில்லை. அப்படிப் பார்த்தால் சுதந்திரப் போராட்டத்தில் கூடத் தான் இளைஞரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கக்கூடாது. மாணவருக்கு அமைதியும் ஆழ்ந்த சிந்தனையும் பெரும்பாலும் கஷ்டப் பட்டாலே வரமுடியும். கிளர்ச்சி எளிதாக இருக்கிறது. அரசியல் தலைவர்கள் அவர்களைத் தூண்டுவது தவறு. குற்றம் அங்கேதான்.”

“அது சரி, உங்களுடன் நான் இப்போது விவாதம் நடத்த விரும்பவில்லை. நீங்கள் சாப்பிடுங்கள். நான் டிரைவரைத் தேடிப் பிடிக்கிறேன்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/333&oldid=1100129" இலிருந்து மீள்விக்கப்பட்டது