பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

ரோஜா இதழ்கள்

மறுபடியும் கார், டிரைவர் என்றாலே அச்சமாக இருக்கிறது. அவளுக்கு.

“வேண்டாம். நான் காலையிலே பஸ்ஸில் போய் விடுகிறேன்...”

அவன் புன்னகை செய்கிறான். “இரவு நீங்கள் தங்குவது யாருக்கேனும் தெரிந்தால் வீணான அவதூறு கிளம்பும். நீங்கள் டிரைவருக்கு அஞ்சுவதாகத் தெரிகிறது. நானே கொண்டுவிட்டு விடுகிறேன்.”

பொறிக்குள் அகப்பட்டுக்கொண்டபின் மென்மையான உணர்வுகளுக்கு இடம் ஏது?

அவதூறு எப்படி வேண்டுமானாலும் கிளம்பட்டும் என்று அவளால் இருக்க முடியவில்லை. குளிரும் வெப்பமும் பழகாமல் அவள் பொது மேடைக்கு வந்திருக்கலாகாது.

“உங்களுக்கு அநாவசியத் தொந்தரவு...”

“பொருளில்லாத பேச்சுக்கள் எதற்கு இப்போது? தொந்தரவுதான். காலையிலோ சற்றுப் பொறுத்தோ வேல் சாமி கதவைத் திறந்து பார்ப்பான். இப்போதே அவனை எழுப்பிச் சொல்லி விட்டுத்தான் வரவேணும்..” என்று சொல்கிறான்.

சற்றைக்கெல்லாம் அவள் வண்டியில் ஏறிக் கொள்கையில் வேல்சாமிக் கிழவன் கதவடியில் நின்று பார்ப்பது தெரிகிறது.


22

வாயிலில் கார்வந்து நிற்கும் ஒசை மிக மென்மையாக இருந்தும் ஞானத்துக்கு விழிப்பு வந்துவிடுகிறது. கதவை அறையும் ஒசையில் அவள் எழுந்து உட்கார்ந்து விளக்கைப் போடுகிறாள். மைத்ரேயி அங்கே இரவு தங்க வந்து ஒரு மாசத்துக்கு மேலாகிவிட்டது. ஒருகால் அருகில் எங்கேனும் பொதுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/334&oldid=1115409" இலிருந்து மீள்விக்கப்பட்டது