பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

ரோஜா இதழ்கள்

அப்பட்டமாகச் சொல்லுங்களேன்?....” என்று மைத்ரேயி சாடுகிறாள்.

அவன் சிரிக்கிறான். “நான் உங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலே. இவங்க உங்க ஸிஸ்டர்னு இங்கே கால்வைக்கும் வரையிலும் தெரியாது. எனக்கு ரொம்ப ஆச்சரியமாயிருக்கு...நீங்க அரசியல்லேந்து அப்போதே விலகிட்டதா நினைச்சேன் ?”

“நான் இப்போதும் விலகி நின்னுதான் வேடிக்கை பார்க்கிறேன். பிழைப்புக்கு நான் வாங்கின ‘டிகிரி’ களெல்லாம் வழி செஞ்சிட்டிருக்கு...”

“ஓ..நான் நீங்களும் இவங்க கட்சியிலே சேர்ந்திருப் பீங்கன்னு நினைச்சு ஒரு நிமிஷம் அசந்து போனேன்.”

ஞானம் புன்னகை செய்கிறாள்.

“நான், நீதான் இவ கட்சியில் சேர்ந்து தம்பியாயிட்டியோன்னு எண்ணினேன்.”

“ஓ, நான் இவங்களை எப்படிக் கொண்டுவிட நேர்ந்ததுன்னு கேட்கிறீங்களா ?...அதை அவங்களே சொல்வாங்க. உங்களைப் பார்த்ததில் ரொம்பச் சந்தோஷம். நான் பிறகு பகலில் ஒருநாள் வரேன், நாடு விடும்முன்ன. இப்ப வரட்டுமா ?”

ஞானம் எழுந்து அவனை வழியனுப்புகிறாள்.

கார் கிளம்பிச் சென்றதும் பல நிமிடங்களுக்கு அமைதி நிலவுகிறது.

மைத்ரேயிக்கு ஞானத்தை நேருக்கு நேர் பார்க்கக் கூச்சமாக இருக்கிறது. ஞானமும் ஏதோ ரசிக்கக் கூடாதது நடந்திருப்பதாக ஊகிக்கிறாள். அதை அவளாகத்தான் சொல்ல வேண்டும் என்று மெளனமாக இருக்கிறாள்.

அவளாக எதுவும் பேசவில்லை. மளமளவென்று கண்களில் நீர் பெருகுகிறது.

“எதற்கு இப்போது அழுகிறாய்? அழுகிறவர்களைக் கண்டால் எனக்குக் கட்டோடு பிடிக்காது. இப்போது எதற்கு அழவேண்டும்? விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/336&oldid=1101423" இலிருந்து மீள்விக்கப்பட்டது