பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

335

போட்டுக் கொண்டு படுத்துக்கொள். காலையில் பார்த்துக் கொள்ளலாம்

ஞானம் சரேலென்று தன்னறைக்குள் சென்று விளக்கை அணைக்கிறாள்.

மைத்ரேயி, கண்களில் நீருடன் அந்த முன்னறையிலேயே சிலைபோல நிற்கிறாள். அதே நாற்காலிகள், புத்தகங்கள், ஒற்றைக்கொத்து மலருடன் பூக்குவளை, கொழுகொழு வென்று சிரிக்கும் குழந்தையுடன் புதுவருடக் காலண்டர்...

ஒழுங்கீனமே ஒன்றிலும் கிடையாது என்று அந்த அறை மந்திரிக்கிறது. அவள் தன் பிறப்பை , தன் தவறுகளை, தன் வீழ்ச்சியை நினைக்கிறாள். அறியாமையால் கட்டறுத்துக் கொண்டு அன்று தனராஜுவை நம்பிப் போனாள். இன்று ஒட்டுப் போட்ட தையலைப் பிய்த்தெறிந்தாற்போல் அறிந்து தெரிந்து தன்னந்தனியே இடறிவிழப் போனாள். முதல் தடவை இடறி விழுந்தபோது குழந்தை என்று பிறர் அநுதாபத்தையேனும் பெற வாய்ப்பிருந்தது. இப்போது யாரும் அநுதாபம் காட்ட மாட்டார்கள். அவள் மீண்டு வந்தாலும் சீனிவாசன் ஒருநாள் அவள் எதிர்க் கட்சிக்காரன் வீட்டில் அடைபட்டுக் கிடந்ததாகத்தான் நம்புவான். அழகிய மணவாளன் போன்றவர்களும் அப்படியே நம்புவார்கள். அவள் இடறி விழுந்ததுமன்றி சேறும்ஒட்டக் காயமும் பட்டுக் கொண்டிருக்கிறாள். சீனிவாசன் தோற்றுப் போனால் தேர்தல் அக்கிரமங்கள் என்று இந்த விஷயத்தை வழக்கு மன்றத்துக்கு இழுக்கத் தயங்கமாட்டான். வெற்றி பெற்றாலும் விட்டுவிடமாட்டான். தானே தன்னைச் சுற்றி நெருக்கமான வலைகளைப் பின்னிக் கொண்டுவிட்டான். யாரோ முன்பின் தெரியாதவன் காரில் ஏறு என்றால் ஏறலாமா?

இந்தக் குறுகிய காலத்துள் சீனிவாசனைப் பற்றி அவள் நன்றாக அறிந்துகொண்டிருக்கிறாள். நேராகப் பேசும்போது இனிமை சொட்டப் பேசுகிறான். சத்தியம் தெய்வம் என்று கூறுகிறான். ஆனால், வாக்காளர் பட்டியலில், இறந்தவர், வீடு மாறிப் போனவர்களுக்கெல்லாம் ஆட்கள் தயாரித்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/337&oldid=1100163" இலிருந்து மீள்விக்கப்பட்டது