பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

337

புழுதியில் விழுந்த மலராக வாடிக்கொண்டிருந்த அவளைப் போற்றிக் காக்கக் கொண்டுவந்த அன்னை அவள்.

ஒருநாள ஒரு பொழுது அவளைப் பட்டினி போட்டிருக்கவில்லை அவள். அவள் காசு கேட்கக் கூசுவாளென்று அாறியாமலேயே கைப்பையில் எப்போதும் பணம் போட்டு வைக்கும் அன்னை அவள்.

அவள் நல்ல துணி உடுத்தவேண்டும் என்று அவளுக்குத் தெரியாமலேயே புடவை வாங்கிக்கொண்டு வந்து வைத்திருக்கிறாள்.

அவள் ஒரு புத்தகம் இரவல் வாங்க வேண்டியிருக்கவில்லை.

அவள் ஒரு சிறு தேவைக்காகவோ, பெரிய தேவைக்காகவோ ஒரு கணமும் கவலைப்பட்டதில்லை.

அந்த உதவிகளை அவள் உதவியாகச் செய்யவில்லை.

அவளுக்கு உடல்நலக் குறைவென்றால் உடனே மருத்துவரை அழைத்துவந்து பேணியிருக்கிறாள். அவள் கூந்தலைச் சீவிப் பின்னல் போட்டிருக்கிறாள்; அவள் சேலையை மடித்து வைத்திருக்கிறாள்.

இன்னும் ஒரே வீட்டில் வாழும்போது ஏற்படக்கூடிய நெருக்கங்களை விழைந்து ஏற்று மகிழ்ந்து மகிழ்ச்சியை அளித்திருக்கிறாள்.

அந்தத் தாயை, இடையில் அவள் மீது போலியாக உறவும் உரிமையும் கொண்டாடிய அத்திம்பேரும், ஏன் அக்காவும்கூட இகழ்ந்து பேசினார்கள். அவள் வாய்மூடி இருக்க வேண்டியிருந்தது. அந்த அம்மைக்கு அவளுடைய இந்த அரசியல் ஈடுபாடு துவக்க முதலே பிடிக்கவில்லை என்பதை மைத்ரேயி உணர்ந்திருக்கிறாள்.

ஆனால் உணர்ந்தும் அவள் தன்னை ஈர்த்த பக்கம் ஓடத்தயங்கவில்லை. உண்மையில் அவள் பண நோக்கத்துக்காகத்தான் மேடை ஏறினாளா? அது ஒரு வெறி, வெளிச்சத்துக்கு ஆசைப்பட்ட வெறி, போஸ்டர்களில் கொட்டை எழுத்துக்களில் தன் பெயரைப் பார்க்கும் வெறி ஆயிரமாயிர

ரோ.இ - 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/339&oldid=1123775" இலிருந்து மீள்விக்கப்பட்டது