பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/340

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

ரோஜா இதழ்கள்

மாய் மக்கள் தன்னைப் பார்த்துத் தன் பேச்சைக் கேட்கிறார் கள் என்று கண்டவெறி.

மைத்ரேயி...!

அந்த வெறியில் அவள் முன்னே நிகழ்ந்தது, பின்னே நிகழப்போவது எல்லாவற்றையுமே மறந்துவிட்டாள்.

கள்ளைக் குடித்தவன் தள்ளாடி வீழ்வதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

படுக்கையில் படுத்தவள் தலையணையில் முகத்தை அழுத்திக் கொண்டு கண்ணீரைப் பெருக்குகிறாள்.

பிறகு அவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

மறுபடி கண்விழித்துப் பார்க்கையில் காலையும் மதியமும் நழுவி மாலை நேரம் என்று புரிகிறது.

ஒரே அசதி, தொண்டை உமிழ்நீர் முழுங்க இயலாமல் இரணமாயிருக்கிறது. தலை பாராங் கல்லை வைத்தாற் போலிருக்கிறது. என்றாலும் எழுந்து வருகிறாள். ஞானம் முன்னறையிலமர்ந்து ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

“அட...? மணி அஞ்சாயிடுத்தா? இத்தனை நேரம் தூங்கிட்டேனே ? என்னை எழுப்பக்கூடாதா அக்கா?”

ஞானம் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமலே, “பாயிலரில் வெந்நீர் இருக்கிறது. புதுப்பால் வாங்கி வைத்திருக்கிறேன். காபி டிகாக்ஷனும் இருக்கிறது” என்று அடுக்குகிறாள்.

வெந்நீரில் முகம் கழுவிக்கொள்ளும் போதும் அந்தப் பாராமுகமான பேச்சுக்கள் நெஞ்சுப் புண்ணைக் கிளறி விடுகின்றன.

வெந்நீரின் இதத்தில் கண்ணிர் மீண்டும் மீண்டும் பெருகுகிறது. பல்துலக்கி முகம் கழுவித் துடைத்துக் கொள்கிறாள். வேறொரு சேலையை எடுத்து மாற்றிக் கொண்டு, கைப்பையில் இருந்து தலைநோவுக்கான மாத்திரையுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/340&oldid=1101425" இலிருந்து மீள்விக்கப்பட்டது