பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

339

சமையல் கட்டுக்கு வருகையில் ஞானம் ஆவி பறக்கும் காபியைக் கிணத்தில் வைத்துவிட்டுப் போயிருக்கிறாள்.

காபிக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு “அக்கா !அக்கா!” என்றழைத்த வண்ணம் வருகிறாள். அவளைக் காணவில்லை தோட்டத்திலும் இல்லை.

வாயிற்படியில் அவள் நீர்தளும்ப நிற்கையில் ஞானம் தொலைவில் புள்ளிபோல் செல்வது தெரிகிறது.

எங்கே போகிறாள் ? காலனியைவிட்டு வெளியே மைதானத்தில்...

ஜானகி குரல் கொடுத்துக்கொண்டே வருகிறாள். “என்ன மைத்ரேயி, இப்படி இளைச்சுக் கறுத்துப் போயிட்டே? எந்த மட்டும் இருக்கு எலக்ஷனெல்லாம்? உன்னைப் பார்த்து ஒரு மாசமாறது.”

புன்னகையை வரவழைத்துக்கொள்கிறாள். “ஆமாம், அக்கா எங்கே போகிறார் ?....”

“தெரியாதே? உன்னிடம் சொல்லயா?”

“ இல்லே, நான் இப்பத்தான் தூங்கி எழுந்தேன். என்னமோ சொல்லிவிட்டுப் போனாப்போல இருந்தது, கேட்டேன்...”

ரொம்ப இளைச்சுப் போயிட்டே, ஒரு மாசத்தில். உடம்பைப் பார்த்துக்கொள். நீயே நிற்பதாக இருந்தாலும் சரி, போனால் போகிறதென்று சொல்லலாம். நீ ஏன் நிற்க மாட்டேன்னுட்டே? உன்னைத்தானே நிற்கவைக்கிற தாக சொன்னாப்பல இருக்கு ?”

“எனக்கு வயசு பத்தாது. அது அவங்களுக்குத் தெரி யாது... ஒரே தலைவலி, நான் போய் ஒரு மாத்திரை சாப்பிட்டுவிட்டுத் திரும்பப் படுத்துக்கொள்ளப் போகிறேன்...”

உள்ளே வந்தவள் கோப்பையிலுள்ள காப்பியையும் மாத்திரையையும் பார்த்துக்கொண்டே பிரமை பிடித்தாற் பல உட்கார்ந்திருக்கிறாள். பிறகுதான் சாப்பிடுவதற்கென்ற நினைவு வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/341&oldid=1101428" இலிருந்து மீள்விக்கப்பட்டது