பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

341

கூட்டத்திலே என்ன நடந்ததுன்னு உங்களுக்கு எப்படித் தெரிவிப்பேன்னு புரியல...”

கீழுதட்டைக் கடித்துக்கொள்கிறாள்.

“எனக்கு எல்லாம் புரிஞ்சிருக்கு. எவனோ காரில் கடத்திண்டு போயிருக்கிறான். இதெல்லாம் சகஜம். தெரிஞ்சிண்டு செய்தபின் அழுகை என்ன அழுகை?..”

குப்பென்று செவிகளை அடைத்தாற்போலிருக்கிறது.

அதற்குள் எப்படித் தெரிந்தது? சிவப்பிரகாசம் ஒரு பேச்சுக்கூடப் பேசவில்லையே ?

“சிவப்பிரகாசம் சொன்னாரா அக்கா?”

“சிவப்பிரகாசம் இல்ல. சீனிவாசன் ஃபோன்ல கூப்பிட்டுக் கேட்டான். அதுவும் ஆஃபீஸ் போனில். எங்கும் போகல, யாரும் கடத்தலே. நீ இங்கேதான் வந்திருக்கேன்னு roll மறைச்சேன்....”

“நீங்கள் அப்போதே என்னை அப்படியெல்லாம் போக வேண்டாமென்று கடுமையாகத் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாதா?”

“நான் எதற்காக நிறுத்தவேண்டும்? நீ பச்சைக் குழந்தையா? சாடையாக என் விருப்பத்தை வெளியிட்டேன். நீ கேட்கவில்லை. உன் இஷ்டப்படி போனாய்.”

“என்னை மன்னிச்சுக்குங்கக்கா, எனக்கு என் பெற்ற அம்மாவைத் தெரியாது. நீங்கள்தான் அப்படி ஒரு பரிவையும் பாசத்தையும் காட்டியிருக்கிறீர்கள். என்னை அடித்துக் கடுமையாகப் பேச உங்களுக்கு உரிமை இருக்கிறது. இந்த இரண்டு நாளாக என்னை முகம் பாராமல் தண்டனை கொடுப்பதை ஏற்க முடியவில்லை.”

“இதோ பார் மைத்ரேயி, இந்த நடிப்பெல்லாம் இங்கே தேவையில்லை. சாக்கடையில் முழுகிக் குளிக்கும் அரசியலென்று நீ தெரியாமல் போகலே. இத்தனை நாளில் ஒருநாள் இரவுத் தங்க நீ வரவில்லை. அக்கா, அத்திம்பேர் இரத்த பாசம் பெரிசென்று ஒடினாய். இப்போது எதிர்க் கட்சிக்காரன் வீட்டில் ஒரிரவு அடைபட்டுக் கிடந்த பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/343&oldid=1101432" இலிருந்து மீள்விக்கப்பட்டது