பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

343

கல்லூரி வாழ்வை நினைப்பூட்டும் புத்தகங்கள். தூசி படிந்திருக்கின்றன. பரீட்சை எழுதுவதையும் பட்டம் பெறுவதையும் ஒரு காலத்தில் பெரிய இலட்சியமாகக் கருதி இருந்தாள் அந்த இலட்சியம் நெருங்கி வருமுன், அதைப் பொருட்படுத்தாமல் வேறோர் கவர்ச்சிக்கு அடிமையானாள்.

இாவு முழுவதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. அலையடித்து அலையடித்துக் கரையில் ஒதுங்கினாற்போல் ஒா் முடிவுக்கு வருகிறாள்.

அந்த வீட்டில் அவளுடைய உடமைகள் என்று அவள் வரும்போது ஒன்றுமே கொண்டு வரவில்லை.

இப்போது அவளுடையதாக அவளுடைய பட்டப் படிப்பின் அத்தாட்சி இருக்கிறது.

முக்கியமான காகிதங்களைத் தவிர, அவள் உடுத்த சேலைகள் இரண்டை மட்டிலும் அவள் சிறு பெட்டிக்குள் வைத்துக் கொள்கிறாள். கைப்பையில் அவள் தானே பேசிச் சம்பாதித்த பொருள், சில நூறுகள் இருக்கின்றன. அதைப் பத்திரமாக எண்ணிப் பார்த்துக் கொள்கிறாள்.

விடியற்காலையில் வழக்கம்போல் பால் வாங்கிக் காப்பி போடுகிறாள்.

ஞானம் படுக்கையிலிருந்து எழுந்து வரவில்லை.

மைத்ரேயி கதவருகில் வந்து, “நான் போயிட்டு வரேன்.” என்று அவள்முன் விழுந்து பணிகிறாள்.

ஞானம் திடுக்குற்றாற்போல் திரும்பிப் பார்ககுமுன் மைத்ரேயி அந்த நிழலைவிட்டு வெளியேறுகிறாள்.


23

வெளியிலிறங்கி மைதானம் கடக்கும் வரையிலும் அன்று தேர்தல் நாளென்று அவளுக்கு நினைவில்லை. பெரிய சாலையில் கட்சிச் சின்னங்களைத் தாங்கிக்கொண்டு வண்டி ஒன்று போகிறது. சாலையில் செல்லும் மனிதர்களிடையே, ஊர்திகளிடையே அந்தக் காலை நேரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/345&oldid=1115411" இலிருந்து மீள்விக்கப்பட்டது