பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

345

நட்சத்திர சின்ன முத்திரையிட்டு உங்கள் வாக்குகளை அளியுங்கள்!” என்று தேர்தல் விளையாட்டு விளையாடத் தொடங்கிய சிறுவர்களிடம் சென்று, “மதுரம் மாமி வீடு எது” என்று கேட்கிறாள்.

ஒரு பையன் மூக்குச் சளியைப் புறங்கையால் துடைத் துக் கொண்டு, “எந்த மதுரம் மாமி மடத்துக்குப் போய் பஜனை பண்ணுவாளே அந்த மாமியா? அவா வீடு பிருந்நாவன் தெருவிலன்னா இருக்கு ?” என்று கூறுகிறான்.

“இல்லே, இந்த மாமி முறுக்கு சீடை எல்லாம் போட்டு விப்பா, ஒரு சின்ன பொண்ணு கூட ஸ்கூலுக்குப் போறது.”

“யாரு, ரேவதியோட அம்மாவா? அவா இங்கில்லியே ? எல்லையம்மன் சந்துக்குள்ள ஒரு வீட்டுக்குப் போய்ட்டா...” என்று விவரம் கூறுகிறான்.

“எனக்கு அந்தச் சந்தை வந்து காட்டுறியா?”

“இதோ, இங்கேதான் இப்படிப் போங்கோ, தெரு முனையிலே குழாய் இருக்கும். தண்ணி இருக்காது.”

மனிதர் இத்தகைய இடங்களிலும் வாழமுடியும் என்று சகிப்புத் தன்மையின் அளவுகோலாக விளங்கும் சந்தில், ஒரு பொந்துக்குள் அவள் ரேவதியின் தாயின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கிறாள்.

இருட்டு, உள்ளிருந்து உயரமாக எலும்பும் தோலுமாக ஐயங்கார்ச் சேலைக்கட்டில் ஒரு கிழவி “யாரு?” என்று கேட்டு வருகிறாள்.

“அவாள்ளாம் ஓட்டுப் போடப் போயிட்டா. எனக்கு கார் வரும்னா. நீ யாரை தேடிண்டு வந்திருக்கேடியம்மா ?”

“மதுரம் மாமி, ரேவதின்னு ஒரு குழந்தை இருக்காளே அவம்மா.”

அந்த முதியவள் இதை நம்பாதவள்போல் மைத்ரேயியை ஏற இறங்கப் பார்க்கிறாள்.

“அவளுக்கு நீ உறவா என்ன ?”

“ஆமாம் ..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/347&oldid=1101438" இலிருந்து மீள்விக்கப்பட்டது