பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

347

“அப்ப ஏதோ சாப்பாடு முழுங்க முடியலே பித்தம், வாந்தி வாதுன்னு இருந்தேண்டியம்மா...என்னைத் தேடிண்டு வந்திருக்கியே, ஓட்டுக்காக வந்தியோ என்னவோ,எனக்குக் கால கூட உட்கார முடியாதேம்மா...”

“நான் எலக்ஷனுக்கு வரல மாமி. இங்கேயே உங்களுடனேயே இருக்கத்தான் வந்துட்டேன்.”

குரல் நெகிழ்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயலுகிறாள் மைத்ரேயி.

“என்னுடனா இங்கியா...?”

“ஆமாம் மாமி. நான் உங்ககூட இருக்கக் கூடாதா?”

“ஐயோ, என்னால ஒரு சோறு பொங்கிக்கூடப் போட முடியாதேடிம்மா, நான் வீட்டிலியா இருக்கேன் ?”

“நீங்க சோறு பொங்கிப் போடணும்னு நான் இங்கே வாலே மாமி, நான் உங்க பெண் போல. குழந்தைகளெல்லாம் எங்கே...?”

“நானும் பதினஞ்சு நாளா படுத்துக் கிடக்கறேன்; அதுகள் என்ன பண்ணும்? சொர்ணத்துக்கிட்டப் போறேன்னு ரெண்டும் நேத்துத்தான் காஞ்சீபுரம் போச்சு. ஏண்டியம்மா, பொட்டியெல்லாம் தூக்கிண்டு வந்திருக்கியே இங்கே எங்கேயானும் வேலையா வந்திருக்கியா? எதோ வழில சொன்னதை மறக்காம வந்துபாக்கறியே, உனக்கு நான் என்ன பண்ணிட்டேன்?”

மைத்ரேயி கைப்பையிலிருந்து ஒரு ஆரஞ்சை எடுத்து உரிக்கிறாள். “சாப்பிடறேளா மாமி, இது வாந்தி எதுவும் எடுக்காது...”

“இதெல்லாம் வேற வாங்கிண்டு வந்திருக்கியா? குடு.”

அவள் வாயைத் திறக்கும்போதே நாற்றம் அதிகமாக இருக்கிறது. உடம்பு மெலிந்து குச்சியாக வற்றி இருக்கிறது. துணி மூடாத கருத்தத் தலையும் பள்ளத்தில் விழுந்த கண்களும் அவளைப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது. ஆரஞ்சுச்சுளையைக் கொட்டை நீக்கி முத்துக்களாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/349&oldid=1101440" இலிருந்து மீள்விக்கப்பட்டது