பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

353

"ஜி எச்சிலா ? இன்னிக்கே சேர்க்க முடியாதா? இதென்ன டி. பி.யா. நளினி?”

கான்ஸர்னு தோணுது. இன்னிக்கெல்லாம் இனிமே முடியாது. நாளைக் காலமே நீ கொண்டா. அவுட் பேஷன்டிலே வந்து மிச்சத்தெல்லாம் பார்த்துக்கறேன்..சே..என்ன மைத்ரேயி நீ! இந்த மாதிரி கேசைக் கொண்டு வந்து காட்டிருக்கே.. என் மனசே கெட்டுப் போச்சு...”

நளினி வாசல் ரிக்ஷாவில் ஏறிக்கொள்ளு முன் மைத்ரேயி கைப்பையைத் திறந்து பத்து ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் கொடுக்கிறாள்.

“சே, நான் விளையாட்டுக்குச் சொன்னேன். இந்த மாதிரி கேஸ்களைப் பார்க்கையில் இதுக்குத்தான் நான் படிக்கிறேன்னு மனசு கரைஞ்சு போகிறது. வீட்டுக்கு வந்தால், ஸிடியில் பாஷா.கன்ஸல்டிங் ஸ்பெஷலிஸ்ட்டுனு போர்டு போட்டுக்கிட்டுப் பணம் பண்ணனும்னு தோணும்..” என்று நளினி சிரிக்கிறாள்.

“சீயூ....நாளைக்குக் காலமே கொண்டுவந்துடு..? கையை ஆட்டி கூறிவிட்டு அவள் போகிறாள்.

அந்த மிகுதிப் பகலும் இரவும் ஒவ்வொரு கணமும் துன்பத்தின் யுகமாக ஊர்ந்தாலும் மைத்ரேயிக்குத் தன்னைப் பற்றிய உணர்வு மடிந்து போனதால் துன்பம் தெரியவில்லை. கடைக்குச் சென்று இரண்டு துண்டுகள் வெள்ளை மல்லில் இரண்டு உடுக்கைகள், சோப்பு, டம்ளர், கிண்ணங்கள், ஒரு ஸ்டவ் என்று அத்தனை சாமான்களுமே வாங்க வேண்டியிருக்கிறது. வெந்நீர் வைத்து அவள் உடலை நன்றாகத் துடைத்து, பவுடர்போட்டு, இருட்டுக் கூடத்தில் (ஒரு பகுதியை அன்றிரவுக்கு ஐயங்கார்க் கிழவியைக் கேட்டு வாங்குகிறாள்) புதிய படுக்கையில் தலையணையை வைத்துப் படுக்க வைக்கிறாள். பால் வாங்கிக் காய்ச்சி வைத்துக் கொண்டு நெஞ்சுக்கு இதமாக ஒத்தடம் தந்தபின் தேக்கரண்டியில் எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கிறாள். நாற்றம் மடிந்து டெட்டால் மணம் கமழுகிறது. அங்கு சுற்றி

ரோ இ - 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/355&oldid=1100792" இலிருந்து மீள்விக்கப்பட்டது