பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

ரோஜா இதழ்கள்

அறைகளில் குடியிருக்கும் குடும்பங்கள், எங்கிருந்தோ தேவதை போல் வந்து பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து, அசுத்தங்களை எடுத்துப் பணிசெய்யும் அவளை வாயடைத்துப் போய் பார்க்கின்றன.

அவளுக்கு உதவியாகத் தண்ணீர் எடுத்துத்தரவோ, நடையைப் பெருக்கவோ, போட்டி போட்டுக்கொண்டு அந்த எளியவர்கள் முன் வருகின்றனர். விடியற் காலையில் ஐயங்கார்ப் பையன் சாரங்கன் டாக்ஸி பிடித்துக் கொண்டு வருகிறான். “நான் வேணா கூட வரட்டுமா? எனக்கு ராத்திரி ஷிஃப்டுதான் ட்யூட்டி” என்று கேட்கிறான். அவனுடைய இளம் மனைவி, “ஆமாம். போயிட்டு வாங்கோ, ஜென்லாசு பத்திரி சமுத்ரம். பாவம், அவர் திண்டாடப் போறார், ஒண்டியா’ என்று வற்புறுத்துகிறாள். “ஏண்டி ஜனகம்! தோசைமாவிருந்தா ஆளுல ரெண்டு ஊத்திக்குடேன்? பாவம், அதும் பட்னியாத்தான் கெடக்கும்?” என்று கூறுகிறாள் கிழவி.

பரிவும் அன்பும்கூடத் தொற்றுநோய்போல்தானோ? வறுமையிலும் வாசனை உண்டு. முதலில் அந்த வாசனையைத் தூவ வேண்டும். சாரங்கன் அவளுடன் ஆஸ்பத்திரிக்கு வருகிறான். நளினி ‘அவுட்பேஷன்டுக்கு’ வந்து நோயாளியைப் படுக்கையில் சேர்க்க உதவி செய்கிறாள். மைத்ரேயிக்கு நாட்கள் செல்வதே தெரியவில்லை. அம்மா காயலாவாக இருப்பதாக எண்ணிக் கொண்டு சொர்ணத்திடம் சென்ற குழந்தைகள் தாங்களாகவே நான்கு நாட்கள் சென்றபின் பஞ்சப் பரதேசிகள்போல் திரும்பிவருகின்றனர். மைத்ரேயி சாமான் வாங்கிச் சமைத்துப் போடுகிறாள். அவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறாள். ஆஸ்பத்திரிக்கு வருகிறாள். மதுரத்தின் பிணி இன்னதென்று திட்டமாக அங்கு பரிசீலனை செய்து தெரியுமுன், அவளுக்கு மூச்சே ஒடுங்கி விடும் போலிருக்கிறது. மைத்ரேயி நளினிக்காகக் காத்துக் காத்து நிற்கிறாள். டாக்டர்கள் எப்போதோ வந்து போகின்றனர். ஒரு விவரமும் புரியவில்லை . ஒரு வாரம் சென்றபிறகு ஒருநாள் அவள் நோயாளிக்குப் பால்கஞ்சியும் ஆரஞ்சுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/356&oldid=1101449" இலிருந்து மீள்விக்கப்பட்டது