பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

355

பழங்களும் வாங்கிக்கொண்டு வருகையில் மதுரத்தைப் படுக்கையில் காணவில்லை. அருகிலுள்ளவர்களிடம் கேட்கிறாள். நர்ஸிடம் விசாரிக்கிறாள்.

அறுவைச் சிகிச்சைசெய்ய தியேட்டருக்குக் கொண்டு போயிருக்கின்றனராம்.

“அந்தம்மாக்குப் பிள்ளையிருக்குதா? உனுக்கு யாரு ?” என்று ஒரு படுக்கைக்காரி மைத்ரேயியை விசாரிக்கிறாள்.

“இருக்கிறாங்க...ராத்திரி துரங்கினாங்களா, அவங்க ?”

“ராத்திரியெல்லாம் ஒரே அழ. தூக்க மருந்து ஊசிபோட்டுது நர்சம்மா ‘எம்புள்ளிங்களை எல்லாம் விட்டுட்டு எப்டீ வருவேன்? அவுங்களைப் பாக்கலியே நான் இன்னும்'ன்னு சத்தம் போட்டு அழுதிச்சி, பாவம். நல்ல நெனப்பில்ல...”

குழந்தைகளை ஒரே ஒரு நாள்தான் அவள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தாள். அத்யயணம் பண்ணும் பையன்கள் இருவரையும் அழைத்து வந்துவிடவேண்டும் நினைப்பு இப்போது வலுவடைகிறது. தியேட்டர் வாயிலில் அவள் நிற்கும்போதெல்லாம் மதுரம் இறந்து விடுவாளோ என்ற அச்சம் தோன்றுகிறது. அவள் வராமலே இருந்து, மதுரம் இறந்து போயிருந்தால் ஒரு மாதிரி. அவள் வந்து, ஆஸ்பத்திரியில் சேர்த்து, முயற்சிகள் செய்தும் இறந்து போனால், ஆஸ்பத்திரியில் விட்டதால்தான் அம்மா செத்துப் போனாள் என்று எண்ணுவார்களோ?

நோ...இல்லை. மதுரம் மாமி சாகமாட்டாள். அவள் பிழைத்து ஓராண்டுக் காலமேனும் இருக்க வேண்டும்.

சே, என்ன அசட்டுத்தனம் ? தொண்டைக்குழாயில் புற்று வைத்தபின் பிழைப்பதாவது ?

எல்லையற்ற கருணையும் சகிப்புத்தன்மையும் தனக்கென்ற ஆசையைக் கொன்றுவிட்ட மேன்மையும் எப்போதும் சிரிக்கும் இயல்பும் துன்பங்களைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்ளும் அருமையும் ஒன்றாய் உருவெடுத்த மதுரம் மாமி ..! உங்களுடைய அருமைகளுக்கெல்லாம் வாழ்வுதந்த பரிசா, இந்த நோய்? பெரிய பெரிய மகான்களையும் நோய் விட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/357&oldid=1123780" இலிருந்து மீள்விக்கப்பட்டது