பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

ரோஜா இதழ்கள்

தில்லை. மகரிஷி ரமணரையும் ராமகிருஷ்ண பரமஹம்ஸரையும்கூட நோய் விட வில்லை.

கதவு திறக்கிறது. மாமி அலங்கோல நிலையில் படுக்கைக்கு வருகிறாள். கடந்த காலம், எதிர் காலம் எல்லாம் அழிந்துபோன நிலையில் மைத்ரேயி வாழ்கிறாள். சாரங்கனைக் காஞ்சிபுரத்துக்கு அனுப்பி அந்தக் குழந்தைகளை அழைத்து வரச் சொல்கிறாள். அன்று மாலை மதுரத்தின் படுக்கையைச் சுற்றி உறவுக்காரக்கும்பல் நெருக்கமாகக் கூடியிருக்கிறது. சொர்ணம், குழந்தைகள், மைத்ரேயி மட்டுமல்ல. அந்த பொந்து வீட்டில் வசிப்பவர்கள் எல்லோருமே வந்து பார்க்கின்றனர்.

இரவு அவர்கள் யாருக்குமே தங்குவதற்கு அனுமதியில்லை. வெளியே புதிய உலகில் நுழைந்தாற்போல் ஆரவாரமாக இருக்கிறது. வெற்றி! வெற்றி! வெற்றி! என்ற முழக்கங்கள். கறுப்பு சிவப்புக் கொடித் தோரணங்கள் புதிய நடை முறையைப் பற்ற முழக்கி எங்கும் பறக்கின்றன. சைக்கிளிலும் லாரியிலும் “வெற்றி! வெற்றி!” என்று முழங்கிச் செல்கின்றனர். பஸ் நிற்குமிடத்தில் சிரிப்பு; பஸ்ஸின் உள்ளே புதிய ஆட்சியைப் பற்றிய நம்பிக்கை மகிழ்ச்சியொலிகள். “கொன்னுட்டாங்க. கொன்னுட்டாங்க ஸார்!” என்றெல்லாம் புகழ் மாரிகள். கடைத் தெருவில் இனிப்பு வழங்குகிறார்கள். “அண்ணா வாழ்க! மூதறிஞர் வாழ்க!” என்று வாழ்த்து கிறார்கள்!

“ரூபாய்க்கு மூணு படி அரிசி போடுவாங்களா ஸார்...?”

மைத்ரேயிக்கு எங்கோ சாம்பற் குவியலுள் ஓர் பொறி மினுக்மினுக்கென்று ஆவலைத் தோற்றுவிக்கிறது. அவள் பேசிக் கொடுத்த கட்சியினர் எத்தனை இடங்களைப் பிடித்திருக்கின்றனர்? மந்திரி சபை கூட்டாக அமையுமா? அவளுடைய இனத்தாரின் நிலை எப்படி இருக்கும்? பொருளுக்காகவே தம் குல மேன்மைகளை எல்லாம் இழக்கத்துணியும் இந்தச் சமுதாயத்தினர் தம் குல மேன்மையை நிரூபிப்பதற்காகவேனும் மதுரத்தைப்போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/358&oldid=1101451" இலிருந்து மீள்விக்கப்பட்டது