பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

357

ஆயிாமாயிரம் எளிய மக்கள் அடிப்படைத் தேவைகளைப் பற்றி வாழ வகை செய்ய முன் வருவார்களா?

எங்களுக்கு அரசின் ஆதரவு தேவையில்லை. திறமை வாயந்த மாணவன் படிக்கட்டும்; எளியோர் இங்கு வந்து நல்ல முறையில் நோவுக்குச் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று ஒருகாலத்தில் மகோன்னத நிலையில் நின்றிருந்த அந்தப் பிரிவினரில் ஒரு சிலரேனும் பிறர் வாழத் தாம் வாழும் மனப்பாங்கைப் பெறுவார்களா ?

மைத்ரேயி வீட்டுக்கு வரும்போது சாரங்கன் மாலைப் பதிப்பைப் பார்த்து அலசிக்கொண்டிருக்கிறான்.

சுதந்திராக் கட்சி போட்டியிட்ட இடங்களில் பெரும் பாண்மையும் மாற்றுக் கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. கூட்டுக் கட்சி போட்டியிட்ட இடங்களில் மாற்றுக் கட்சி தோல்வி யடைந்திருக்கிறது.

கட்டமும் கோலாகலமும் முடிந்தபின்னர், மணம் குலைய நிறம் குலையச் சிதறிக் கிடக்கும் ரோஜா இதழ்கள் நினைவை நிறைக்கின்றன.

சீனிவாசன் தோல்வி; லோகா ஈட்டுத் தொகை இழக்கிறாள்.

ராஜாவும் வெற்றி பெறவில்லை.

ஆட்சிபீடத்தில் இருப்பவர்களை, செல்வாக்கு மிகுந்தவர்களைத் தம் சுய நலன்களுக்காக அண்டி நிற்கும் தாழ்வுக்குத் தம்மைத் தாழ்த்திக்கொண்டவர் தாழ்ந்தே போகின்றனர். அவர்களுக்கு எழுச்சி இல்லை.

பகலில் இருண்டு கிடக்கும் அந்தக்கூடத்தில் புகை படிந்த மஞ்சளாக இருபத்தைந்து வத்தி ஒளி வெளிச்சம் பரவுகிறது. சொர்ணம் கைக்குழந்தையைக் கீழே கிடத்தி விட்டு உள்ளே அடுப்பை மூட்டிச் சமையல் செய்யப் போகிறாள். பெண் குழந்தைகள் இருவரும் பாடம் படிக்க அமர்ந்திருக்கின்றனர்.

முப்புரி நூல் மார்பின் குறுக்கே புரள, கிராப்பில்லாத குடுமித்தலை அவர்களை இன்னாரென்று விளக்க இரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/359&oldid=1100800" இலிருந்து மீள்விக்கப்பட்டது