பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

கலைஞர் மு. கருணாநிதி


நூலை வெளியிட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி திரு.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ். அவர்கள் பாராட்டிப் பேசியது மேல்நாட்டில் சிறுவரைப்பற்றி ஒரு பழமொழி உண்டு. அதாவது சிறுவரைப் பார்க்கலாம், அவர்கள் ஒலியைக் கேட்கக்கூடாது' என்று. "Children should be seen, not heard". இதே பழமொழி நீதிபதிகளுக்கும் அதிகமாகப் பொருந்தும் என்று எனக்குத் தோன்றுகிறது. நீதிபதிகளைப் பார்க்கலாம் நீதிமன்றங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் அதிகம் கேட்கக்கூடாது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் இன்னும் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டுமென்பது என்னுடைய முடிவு. நம்முடைய இலக்கிய மரபில் ஒரு தொடர் வருகிறது. "மூலையில் இருந்தாரை முற்றத்தே விட்டார்" என்று. மூலையில் இருந்த என்னை முற்றத்தில் ஏன் விட்டார்கள்? எனக்கு என்ன தகுதி? என்று நான் சிறிது யோசித்துப் பார்த்தேன். அதில் எனக்கு ஒரு தகுதி தோன்றிற்று. அதை கூறுகிறேன்; தமிழில் எனக்கு இலக்கியப் பற்று உண்டு, சிறு வயதிலிருந்து. ஆனால் என்னைவிட அதிக இலக்கியப் பற்று உள்ளவர்கள் இங்கு இருக்கிறார்கள். என்னைவிட வாழ்நாளை எல்லாம் தமிழ் இலக்கிய மரபிலே, இலக்கிய ஆய்விலே செலுத்தியவர்கள் இருக்கிறார்கள். தமிழில் நவீனம் என்று தோன்றியது? 19-ஆவது நூற்றாண்டில்தான் (அதற்கு முன்பு பெஸ்கி என்ற வீரமாமுனிவர் பரமார்த்த குரு கதை போன்ற சிறு வசனம் எழுதினார்). அதற்கு முன்புள்ள இறையனார் அகப்பொருள் உரை, அடியார்க்கு நல்லார் உரை, பரிமேலழகர் உரை-இவைகள் எல்லாம் உரைநடை என்று சொல்ல முடியாதவாறு கடினமாக இருந்தன. பிரதாப முதலியார் சரித்திரம் என்று வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் (இதை நுட்பமாகக் குறித்தல் வேண்டும்). ஆங்கில இலக்கிய சரித்திரத்தில் கோல்டுஸ்மித் (Goldsmith) எழுதிய 'விகார் ஆஃப் வேஃக்பீல்டு' (Vicar of Wakefield) என்ற நூலுக்கு எடை சமமாக இருக்கிறது. அதாவது பாதி நீதி நூல், மீதி நவீனம். இன்னும் நவீனம் முற்றும் மிளிரவில்லை. அதன்பிறகு காலஞ் சென்ற ராஜம் ஐயர் அவர்களும், என்னுடைய தந்தையார் காலஞ்சென்ற மாதவையா அவர்களும், முறையே கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் என்ற 2 நவீனங்களை எழுதினார்கள். அந்த நவீனங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இப்போது நவீனங்கள் பெருகி வந்திருக்கின்