பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

133


நெருங்கிப் பழகவே கூடாது! ஒருவரையொருவர் அடிக்கடி பார்த்து மகிழ வேண்டும். அவ்வளவுதான். காலமும் நேரமும் விரைவில் நமக்குச் சாதகமாகவே அமைந்துவிடும். அதன் பிறகு நம் காதலை நிறைவேற்றிக் கொள்வோம். என்ன சரிதானா?" என்று அவள் தலையை நிமிர்த்தினாள் முத்துநகை.

தாமரை, அவளைப் பார்த்து "இந்தக் கொடுமையான நிபந்தனைகள் எல்லாம் இப்போதே எதற்காக? என் இஷ்டத்துக்கு விரோதமாக என் அண்ணன் நடக்க மாட்டார். பயப்படாமல் புறப்படுங்கள்" என்றாள் அவள் கைகளைப் பிடித்திழுத்தவாறு.

பின்னர் அவளும் தாமரையும், தனித்தனிக் குதிரைகளில் ஏறிக் கொண்டார்கள். தாமரையைத் தொடர்ந்து முத்துநகை தன் குதிரையை நடத்திச் சென்றாள்.

அவர்கள் இருவரும் போகிற காட்சியைத் தொலைவில் உள்ள புதர் மறைவிலேயிருந்து இருங்கோவேள் கவனித்துக் கொண்டிருந்து விட்டுக் குதிரைகளின் குளம்படிச் சத்தம் மறைந்ததும் தன்னுடைய குதிரையிலேறிப் புறப்பட்டான்.

காட்டின் நடுவே கட்டப்பட்டிருந்த மரமாளிகையின் அமைப்பும். மாளிகையை ஒட்டினாற்போல் காணப்பட்ட வீரர்களின் கோட்டமும் முத்துநகைக்கு இருங்கோவேளின் மீதிருந்த ஆத்திரத்தை அதிகமாக்கின. இத்துணை ஏற்பாடுகளோடு பகை மன்னன் தன் சூழ்ச்சிக் கோட்டையை உருவாக்கியிருக்கிறானே என்ற திகைப்பும் அவளைச் சற்று நடுங்கச் செய்தது. எதிரியின் இருப்பிடத்திற்கே வந்து விட்டோம். யாரும் கண்டுபிடிக்க இயலாத பகைவனின் பாசறையைக் கண்டுபிடித்து விட்டோம் என்ற திருப்தியும் அவள் முகத்தில் மலர்ந்தது. அதோடு எந்தச் சமயத்தில் தன் வேடம் கலைந்துவிடுமோ என்ற சந்தேகமும், அப்படிக் கலைந்து விட்டால் அதனால் எற்படும் விளைவு எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்ற பயமும் அவளது மலர்ந்த முகத்தை உடனே கருகிடச் செய்தன.

பாழ் மண்டபத்திலே மழையும் காற்றும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் கடமையைச் செய்த நேரத்தில் அவளது வேடம் அவனுக்கு எதிரே கலைந்த போது அந்த நெருக்கடியிலும் ஒரு இன்பங் கண்டாள். சந்தர்ப்பத்தை வாழ்த்தினாள். அப்படியொரு சந்தர்ப்பம் இந்த மர மாளிகை வட்டாரத்தில் ஏற்பட்டு விட்டால்? அய்யோ? அதை நினைக்கவே அவளால் முடியவில்லை. இருங்கோவேளைப் பற்றி அவ்வளவு கொடூரமாக அவள் கணக்கிட்டு வைத்திருந்தாள். கரிகால் மன்னரைக் கொல்லுவதற்குச் சதித்திட்டம் வகுத்த ஒருவன் மன்னனுக்குரிய