பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

13


ரோமாபுரிப் பாண்டியன் 13 ஆம். இங்கு முத்துநகை என்று ஒரு பெண் வருகிறாளே, அவள் என்ன ஆண் வேடம் தரித்துப் போகிறாளே; சிறிதும் அச்சம் இல்லாமல் குதிரை மீதேறிச் செல்கிறாளே; பயங்கரமான கட்டங்களில் சிக்கித் தவிக்கிறாளே என்றால், அவைகள் தமிழ் மரபுக்கு ஒத்தவை அல்ல என்று நாம் கூறிவிட முடியாது. நான் இங்கு இலக்கியத்திலிருந்து எடுத்துக் காட்டினால் காலம் ஆகிவிடும். அந்த அமெரிக்கர்களிடம் கூறினேன்: புறநானூற்றில் இருந்து. ஒன்றில் தாய் கூறுகிறாள்; என்னுடைய மகனைத் தேட வேண்டுமா? என்னுடைய மகன் என் கர்ப்பப் பை ஆகிய குகையில் சிறு காலம் தங்கிய புலி. (எவ்வளவு அழகான உவமை!) அந்தப் புலி சென்றுவிட்டது! அதைப் போர்க்களத்தில் முதுகில் ரணம் இல்லாமல் மல்லாக்கப் பார்க்கலாம் என்கிறாள். ஆகையால் மறம், வீரம் இவைகள் உண்மையாகவே தமிழ்நாட்டில் மிகவும் செறிந்த நயங்கள் என்பது நமக்குச் சிறிதேனும் ஐயமில்லாமல் தெரிகின்றது. மற்றொன்று எனக்கு மிகச் சுவையாகப் பட்டது. ஒரு பெண் ஆண் வேடம் தரிப்பதோ, அந்த ஆண்வேடம் தரித்த பெண்ணை மற்றொரு பெண் காதலிப்பதோ, இது நேரிடக்கூடியதா? ஆண் என்று நினைத்து மயங்கிக் காதலிப்பது நேரிடக்கூடியதா என்று நான் நினைத்த அளவில் ஷேக்ஸ்பியர் மகாகவியின் இரண்டு நாடகங்களில் -'As you like it' 'Twelfth Night' என்ற இந்த இரண்டு நாடகங்களிலும் இது முக்கிய கட்டமாக வந்திருக்கிறது. பெண் ஆண் வேடம் தரிக்கிறாள். அந்த ஆண்வேடம் தரித்த பெண்ணை மற்றொரு பெண் காதலிக்கிறாள்! ஆனால் ஷேக்ஸ்பியர் ஒன்றை விட்டுவிட்டார். நம்முடைய கலைஞரை ஒப்பிட்டுப் பார்த்தால் ஷேக்ஸ்பியர் சிறிது கவனம் இல்லாமல் இருந்திருக்கிறார். குரல் வெளிப்பட்டு விடுமே என்ற ஒரு செய்தி! எவ்வளவுதான் உடை உடுத்தி, பெண் ஆணாக நடித்தாலும், குரலினால் அறிமுகப்படுத்தப்பட்டு விடுவாளோ என்ற ஒரு செய்தி இருக்கிறது அல்லவா? அதில் கலைஞர் மிகவும் கவனம் செலுத்தி, "இந்த முத்துநகை என்ற பெண் ஆண் குரலில் பேசிப் பழகிக் கொண்டாள்" என்று எழுதியிருக்கிறார். எனக்குச் சிறிது வியப்பாக இருந்தது. அடடே நல்ல வேளை, இவர் ஒரு வழக்கறிஞராக ஆகி, நீதி மன்றங்களில் வந்திருந்தால், நமக்கு மிகத் தொல்லையாக இருந்திருக்குமே; இவ்வளவு நுட்பமாக ஷேக்ஸ்பியர் மகாகவி கவனிக்காது விட்டதைக்கூட இவர் கவனித்து இருக்கிறாரே என்று உண்மையில் நான் அதை மிகவும் மெச்சினேன். மற்றொன்றைக் கூறவேண்டும். இதில் ஒரு பிரெஞ்சு மொழியை நான் உபயோகிக்கக் கடமைப்பட்டுள்ளேன். சிலருக்கு அது தெரியாமல் இருக்கலாம். அதற்குத் தமிழாக்கம் கூறுகிறேன். இப்போது புதிய இலக்கணம் இருக்கிறதே. இதில் நான் சிறிது உழல வேண்டியிருக்கிறது. புதிய இலக்கிய வட்டங்களில் அவமகாம்' என்ற பிரெஞ்சு மொழி உபயோகிக்கப்படுகிறது. அதற்கு, முன்னணி வகுப்பு என்று பொருள். முன்னணி வகுப்பு எழுத்தாளர்க்கு ஒரு முக்கிய லட்சணம் என்னவென்றால், பால் அல்லது இன உணர்ச்சி அதாவது ஆண் மகன் பெண்ணால் கவரப்படுதல், பெண் ஆண்