பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

கலைஞர் மு. கருணாநிதி


இருங்கோவேள் கூறுவது போல் ஒரு கடிதம் எழுதினால் அது பாண்டியரிடம் செல்லும்; பாண்டியர் அதைப் படித்ததும் செழியனைத் துரோகி என்று தூற்றுவார். படையெடுப்பு நின்று விடும். அதன் காரணமாகச் செழியனின் உயிர் காப்பாற்றப்படும்; இப்போது எப்படியோ சாகாமல் தப்பித்துக் கொண்டால் எவ்வாறேனும் இருங்கோவேளிடமிருந்து விடுபட்டுப் பாண்டியரிடம் உண்மையைக் கூறி, துரோகியல்ல என்று நிரூபித்து விடலாம்.

இந்தச் சிந்தனை செழியனுக்கு ஒரு புதிய தெம்பை அளித்தது என்றே கூற வேண்டும். அத்தோடு அவனுக்கு மற்றுமொரு சந்தேகம். இருங்கோவேள், தன் தங்கை தாமரையைத் தனக்கு உண்மையிலேயே திருமணம் செய்து வைக்கச் சம்மதிப்பானா என்பதே அது. அதையும் கேட்டு விடலாம். அவன் மனத்தை ஆராய்ந்து விடலாம் என்ற கருத்தோடு அவனைப் பார்த்து "உன் விருப்பப்படியே பாண்டியருக்கு ஓலை எழுதுகிறேன். அதேபோல் தாமரைக்கும் எனக்கும் திருமணம் நடைபெறுமா?" எனக் கேட்டான்.

அவனது துணிச்சலான கேள்விக்கு இருங்கோவேள் சட்டென்று பதில் சொன்னான்.

"தாராளமாக நடைபெறும். ஆனால் அதற்கும் ஒரு நிபந்தனை இருக்கிறது."

“என்ன நிபந்தனை?"

"அப்படியொன்றும் பயங்கரமானதல்ல; அதெல்லாம் நிச்சயம் செய்யும்போது கூறுகிறேன். இப்போது நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்ளலாம். என்ன சொல்கிறாய்? உதவி புரிகிறாயா? ஆனால் இந்த உதவி உன் உயிருக்கும் சேர்த்துத்தான் என்பதை மறந்து விடாதே!"

"உதவி செய்கிறேன்; ஒரு சிறு நிபந்தனை. என்னை இந்தச் சித்திரவதைக் கூடத்திலேயிருந்து மாற்றி, வேறு ஒரு நல்ல இடத்தில் பூட்டி வைக்க வேண்டும். முடியுமா?"

"தாராளமாக! இங்கேயுள்ள இடத்தில் ஒரு நல்ல இடம் உனக்கு ஒதுக்கப்படும். சரி இதோ ஓலை - இந்தா எழுதுகோல் - உடனே எழுது!"

ஓலையையும் எழுதுகோலையும் பெற்ற செழியன் எழுதத் தொடங்கினான். இருங்கோவேள் கூறியவற்றை மிகச் சுருக்கமாக எழுதி முடித்து அவன் கையில் தந்தான்.

"பாண்டியர் பெருவழுதிக்கு, செழியன் வணக்கம், என்னை இருங்கோவேளிடமிருந்து மீட்பதற்கு முயல்வதாகக் கேள்விப்பட்டேன். தேவையில்லை - தாங்கள் என்னிடம் மறைத்து வந்த மணமகளை