பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

175


அவரையே பார்த்துக்கொண்டே இருந்து விட்டு அவள் போய்விட்டாள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு!

புலவர், கரிகாலனுக்கு நேரே போய் நின்றதும் அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. காரணம், புலவரின் முகத்தில் அவன் கண்ட மாறுதல்தான்! மகளைக் காணாத சோகத்தால் புலவர் முகம் மாறி இருந்ததை அவன் இதற்கு முன் கண்டிருக்கிறான். ஆனால் இப்போது அவன் காணும் அவரது முகத்தில் வேதனையைவிடக் கோபமே மிகுந்திருக்கக் கண்டான்.

"புலவரே!" என்றான் ஆவலுடன்!

"சோழ மண்டலத்தின் கீர்த்தி குப்பை மேடாகி விட்டது!" என்று கத்தினார் புலவர்.

"என்ன சொல்கிறீர்கள்?"

-கரிகாலன் மிகுந்த ஆச்சரியத்துடன் புலவரிடம் நெருங்கி வந்து அவர் உதடுகளின் அசைவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

"வீரத்தை நிலைநாட்டுவது பெரிதில்லை. செல்வத்தைக் குவிப்பதும் பெரிதில்லை; உலகெங்கும் புகழ்க்கொடி நாட்டுவதும் பெரிதில்லை; ஆனால் மன்னவா! வாய்மையைக் காப்பாற்றுவதே சிரமமான வேலை! அதைக் காப்பாற்றத் தவறிவிட்டது சோழப் பேரரசு!"

"விவரமாகச் சொல்லுங்கள் புலவர் பெருமானே!" -கரிகாலன் ஆத்திரத்துடன் பதிலை எதிர்பார்த்தான்.

"செழியனை மீட்டுத் தருவது நமது பொறுப்பு என்று பாண்டியனிடம் சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா?"

"ஆமாம், சொன்னேன்."

"அதற்காக இதுவரை இங்கு நடைபெற்ற முயற்சி என்ன?" கரிகாலன் மௌனமாக இருந்தான்.

"பாண்டியன் பெருவழுதி சோழரின் வார்த்தைக்கு மதிப்பு வைத்தது குற்றம் இல்லையா?"

கரிகாலன் பேசவில்லை.

"எந்தப் படையெடுப்பு வேண்டாமென்று நான் தடுத்தேனோ அந்தப் படையெடுப்பு முறையால் செழியனை மீட்க வேண்டிய அவசியம் பாண்டியனுக்கு ஏற்பட்டு விட்டது. சோழர், நிச்சயம் செழியனை மீட்கும் காரியத்தில் ஈடுபடுவார் என்றுவேறு நான் பாண்டியருக்கு உறுதியளித்-