16
கலைஞர் மு. கருணாநிதி
16 கலைஞர் மு. கருணாநிதி மாதிரித் தற்கொலை புரிந்து கொள்கிறாள். கிளியோபாட்ரா இறக்கும் முன்னரே அவளை நாகம் கடித்து விட்டது. உடனே அந்தப் பணிப்பெண் சவமாகி விடுகிறாள். 'அவள் முதலில் என்னுடைய காதலனாகிய அந்தோணியைத் தேவ லோகத்தில் சந்தித்தால் அந்த அதர முத்தத்தை அவன் முதலில் பெற்று விடுவான். நாம் முதலில் சாகவேண்டும்' என்று எண்ணுகிறாளாம்! செயங் கொண்டானின் கருத்து அந்த ஷேக்ஸ்பியருக்கு எப்படி வந்தது? அதே கற்பனையை இவர் எப்படி விவரித்தார்? அவர் எப்படி விவரித்தார்? இவ்வகையாகப் பலப்பல தொடர்புகளை -பல இலக்கியங்களைப் பார்க்கும் போது கவிஞர் உள்ளம் என்பது பெருங்கடல். அதில் தனித்தனிக் கவிஞர்கள் மிதக்கிறார்களேயொழிய அது ஒரே கவிஞனுக்கு உறைவிடம் என்று கூறமுடி யாது என்று சொல்லலாம். நான் முன்பு குறிப்பிட்டேனே: ஷேக்ஸ்பியர் மகாகவியின் கருத்தும், நம் கலைஞரின் கருத்தும் இப்படித்தானே ஒத்து வருகின்றன. எனவேதான் இந்த நூலை வெளியிடுவதில் நான் மிகப்பெருமை கொண்டு வெளியிடுகிறேன். வணக்கம்.