218
கலைஞர் மு. கருணாநிதி
மண்டபத்து இடிந்த சுவரில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் அவள் கண்களை இழுத்தன. அருகே ஓடி அதைப் படித்தாள். காட்டுப் பச்சிலை களால் எழுதப்பட்ட அந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலாக மாறி அவள் கண்களைக் குத்தின.
"இந்த மண்டபத்தில் ஒரு வீரன் குற்றுயிராய்க் கிடந்தான். யாரும் துணையில்லை. செத்துக் கொண்டே இருந்த அவனைத் தூக்கிப் பிழைக்க வைக்க முயற்சி செய்தோம், முடியவில்லை. 'நீ யார்?' என்று கேட்டோம். 'இருங்கோவேள்! இருங்கோவேள்; முத்துநகை! முத்துநகை!' என்று கூறிக் கொண்டே உயிர்விட்டான். மண்டபத்துக்கு அருகே அவன் சடலத்தை அடக்கம் செய்து விட்டுத் திரும்பி விட்டோம்.
இங்ஙனம்
வழிப்போக்கர்"
இதைப் படித்த முத்துநகை "அய்யோ அத்தான்!" என்று தலையைச் சுவரில் முட்டிக் கொண்டு மயக்கமுற்றுத் தடால் எனக் கீழே சாய்ந்தாள்.
வெகு நேரத்திற்குப் பிறகு முத்துநகை மயக்கம் தெளிந்து மெல்ல மைகளைத் திறந்து பார்த்தபோது அவளுக்கு மீண்டும் மயக்கம் வரும்போல் ஆகிவிட்டது. பாழ்மண்டபத்தின் சுவரில் எழுதப்பட்டிருந்த அந்த எழுத்துக்களைப் படித்ததும், படிக்கும்போதே நினைவு கலங்கிய தும் அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தன. 'மயக்கமுற்று மண்டபத்திலே தானே விழுந்தோம்? இப்போது வேறிடத்தில் அல்லவா இருக்கிறோம்?' என்று அதிர்ச்சி அடைந்தாள். விழிகளை மெதுவாகச் சுழலவிட்டாள். நிச்சயமாகத் தான் இருக்குமிடம் மண்டபம் இல்லையென்பதைப் புரிந்து கொண்டாள். மரத்தாலான ஒரு வீட்டுக்குள் அவள் படுக்க வைக்கப் பட்டிருப்பதை உணர்ந்தாள்.
இது என்ன புதிய வீடா? அல்லது இருங்கோவேளின் பழைய மரமாளிகைதானா? இளைத்துப்போன நினைவுகளுக்குத் தெம்பு ஏறிற்று. இருங்கோவேளின் மரமாளிகையில் தான் கிடத்தப்பட்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள். தன் படுக்கைக்கு அருகே ஒரு தட்டில் பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு கிண்ணத்தில் பழரசம் இருந்தது. இவ்வளவு அக்கறையாகத் தன்னை யார் கவனித்திருக்க முடியும்? கேள்வி எழுந்தது. அத்தோடு பதிலும் பிறந்தது. எல்லாம் அந்தப் பைத்தியக்காரி தாமரையின் வேலையாகத்தான் இருக்குமென்று முடிவு கட்டிக் கொண்டாள்.
அவளையறியாமல் அவள் கண்கள் நீரைப் பொழிந்து கொண்டேயிருந்தன. தான் மயங்கி விழுந்த பிறகு தாமரை மண்டபத்திற்கு