பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

கலைஞர் மு. கருணாநிதி


பாழ்மண்டபத்தில் முத்துநகை மயக்கமுற்று விழுந்ததும் அருகிலுள்ள புதர் மறைவிலிருந்து இரண்டு பேர் ஓடி வந்தார்கள். அவர்களில் ஒருவன் இருங்கோவேள்; இன்னொருவன் இருங்கோவேளின் ஆள் விழுந்து கிடந்த முத்துநகையை இருங்கோவேள் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு முகத்தைப் பார்த்தான். மூச்சு இழைந்துக் கொண்டிருந்தது. உடனே தன் ஆளை அனுப்பிக் குதிரையைக் கொண்டு வரச் சொல்லி, முத்துநகையையும் குதிரையில் ஏற்றிக் கொண்டு மரமாளிகை நோக்கிப் பறந்து விட்டான். மரமாளிகையில் தன் தங்கை தாமரையின் அறையில் அவளைப் படுக்கவைத்துத் தங்கையிடம் ஒப்புவித்து விட்டு வெளியேறினான்

"என் பேச்சை நீ நம்புவதற்கு மறுத்தாயே, இதோ கொண்டு வந்து விட்டேன் உன் காதலனை, இனிமேலாவது அண்ணன் வார்த்தை சரிதானா என்று சோதித்துப் பார்!" என்று கூறி முத்துநகை வெளியேற முடியாதபடி காவல் போட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.

அவன் போனபிறகு நடந்த நிகழ்ச்சிதான் முதலில் தீட்டிக்காட்டப் பட்டது.

அன்றிரவு மரமாளிகையில் என்றுமில்லாத அமைதி குடி கொண்டிருந்தது. காரணம், இருங்கோவேள் முகம் மிகவும் சோகமாகக் காட்சியளித்ததுதான் போலும். தலைவனின் முகத்தில் செழிப்பில்லை என்றதும் வீரர்களுக்கு உற்சாகம் எங்கிருந்து வரும்? அதனால் அவர்கள் அன்றிரவு கூத்து, கும்மாளம் எதுவுமின்றிச் சோர்வுடன் காணப்பட்டார்கள்.

கரிகாலனை பழிவாங்குவதற்குத் தான் செய்த அருமையான முயற்சி தோல்வியடைந்ததே என்பதை எண்ணி எண்ணி இருங்கோவேள் சோர்வுற்றான்; அத்தோடு முத்துநகையின் பிரச்சினை வேறு அவனுக்குப் பெருங்குழப்பமாக வந்து முடிந்தது.

தன்னை உயிரினும் மேலாக நேசிக்கும் ஒருத்தி தன்னையே பழிவாங்கத் துடித்து நிற்கிறாள் என்று எண்ணும்போதும், அவளைத் தான் ஏமாற்றி அவளது காதலுக்கு பெருஞ்சோதனையை உண்டாக்குவதை