பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

227


ரோமாபுரிப் பாண்டியன் 227 மாளிகைக்கு வெளியே வந்து விட்டாள்; குதிரைக் கொட்டடிக்கு வந்து சேர்ந்தாள். குதிரைகள் கனைத்துக் கொண்டும், தீனி தின்று கொண்டும் அமைதியற்று நின்று கொண்டிருந்தன. கொட்டடிக்குள் நுழைந்தாள்; அவளையும் மீறி இருமல். காவலன் விழித்துக் கொண்டான். “யார் அது?” என்று அருகே ஓடிவந்தான். கையிலிருந்த தீப்பந்தத் தால் முகத்தைப் பார்த்தான். அரசி, அதிகார தோரணையில் ஸ்! சும்மா இரு! ஒரு குதிரையை அவிழ்த்துவா!' என்று கட்டளையிட்டாள். காவலன், அரசிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுக் குதிரையைக் கொண்டு வந்து நிறுத்தினான். அதில் எப்படித்தான் ஏறி உட்கார்ந்தாளோ தெரியாது - குதிரை பறந்தோடத் தொடங்கியது. குதிரை போன பிறகு காவலனுக்கு யோசனை பிறந்தது. “இந்த அகாலத்தில் அரசியார் எங்கே தனியாகப் போகிறார்கள்?" "அய்யய்யோ! அவர்கள் நோயாளியாயிற்றே!' காவலன் இப்போதுதான் தெளிவாக விழிப்படைந்தான். இதை மன்னனிடம் சொல்லாமல் இருக்கக்கூடாதென்று இருங்கோவேளின் இருப்பிடம் நோக்கி ஓடினான். பரபரப்புடன் ஓடிவரும் குதிரைக் கொட்டடிக் காவலனை இருங்கோவேளின் மாளிகை காவலர்கள் வழிமறித்து, "என்ன விசேடம்?" என்று கேட்டார்கள். அவர்களிடம் அவன் விவரத்தைக் கூறி, உடனே மன்னனைப் பார்க்க வேண்டுமென்று துடியாய்த் துடிக்கவே அவனை அழைத்துக் கொண்டு மன்னன் படுத்திருக்கும் இடத்திற்குப் போனார்கள். படுக்கையறையில் விளக்கு மாத்திரம் 'மினுக் மினுக்'கென்று எரிந்து கொண்டிருந்தது. இருங்கோவேளைக் காணவில்லை. எங்கே போயிருக்கக்கூடும் என்று அவர்களால் உடனடியாக யூகிக்க முடியவில்லை. இருங்கோவேள் மன நிம்மதிக்காக வேண்டி எப்படியாவது தூக்கத்தைத் தழுவிக் கொள்ளலாம் என்றுதான் பெரு முயற்சி செய்தான். சில சமயங்களில் சாவைக்கூட விரும்பியவுடன் அழைத்துக் கொள்ளலாம்... தூக்கத்தை அழைக்க முடியாமல் தவிக்க நேரிடும்! கவலைகள், சாவை அருகினில் அழைத்துவரும் சக்தி பெற்றவை. ஆனால் தூக்கமோ கவலைகளைக் கண்டால் வெகு தொலைவில் ஓடிவிடும். படுக்கையில் புரண்டு புரண்டு இருங்கோவேள் தொல்லைப்படும் போது அவன் வாழ்க்கையின் ஏடுகளும் ஒன்றன் பின் ஒன்றாகப் புரண்டு