228
கலைஞர் மு. கருணாநிதி
228 கலைஞர் மு. கருணாநிதி கொண்டுதான் இருந்தன. இன்றைய கருநாடகப் பகுதியான மைசூர் வட்டாரத்திலும், தமிழகத்தில் இன்றைய புதுக்கோட்டைப் பகுதிகளிலும் சிதறிக்கிடந்த வேளிர்குலத்தினரை ஒன்று திரட்டிப் பலம்வாய்ந்த வேளிர்குடிப் பேரரசு ஒன்றை நிறுவுவதாக அவன் திடசித்தத்துடன் முயற்சிகளை மேற்கொண்டான். அவன் முயற்சிகளுக்குப் பெருந்தடை யாகத் தான் கரிகாலனின் சோழப் பேரரசு விளங்கி வந்தது. உறையூரை யும், பூம்புகாரையும் முறையே பெருநகராகவும் தலைநகராகவும் கொண்டு வலிமை வாய்ந்த படைகளை அரணாக அமைத்து அரசோச் சிய சோழவேந்தன் கரிகாலனைத் தோற்கடித்தாலன்றித் தன் முயற்சிகள் வெற்றி பெற முடியாது என்ற பேருண்மை நாளுக்கு நாள் பெருத்துக் கொண்டே வந்தது. எப்படியும் கரிகாலனைப் பழி தீர்த்து அவன் கல்லறைமீது வேளிர்குடிப் பேரரசை நிறுவலாம் என்று அவன் கண்டு வந்த கனவு, கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்துவருவதை அவன் தெளிவாக உணரத் தலைப்பட்டு விட்டான். இறுதியாகக் கிடைத்த நல்ல சந்தர்ப்பமும் எப்படியோ நழுவி விட்டது. இனிச் சோழ மன்னன் எச்சரிக்கையாகி விடுவான் என்று எண்ணி, அவன் சோர்வடைந்தான். அப்படிச் சோர்வுற்று வருகிற நேரத்தில் அவனுக்கு உற்சாகம் தரக் கூடிய நிலையில் பெருந்தேவியாவது இருந்தாளா என்றாள் அதுவுமில்லை. அவனுக்கு உற்சாகமும், மகிழ்ச்சியும், உலகில் அவன் இதுவரையில் காணாத இன்பமும் அளிப்பதற்கு ஒருத்தி இருக்கிறாள். வீரபாண்டி என்ற பெயரில் அவளிடம் சென்றால் இறுகத் தழுவி இன்பமழை பொழிவாள். இருங்கோவேள் மன்னனாகச் சென்றால் இறப்புலகிற்கு அனுப்பிவைக்கத் துடித்து நிற்பாள். அதிலும் மனக்குழப்பந்தான். நிம்மதியில்லை. எல்லாக் குழப்பங் களும் ஒரே அடியில் தீர்ந்து விடும், கரிகாலனைத் தொலைத்துவிட்டால். அதற்கு வேளிர்குடியினர் இனித் தயாராக இல்லை. சோழன் படைகளிடம் தாங்கள் பட்டபாடு போதுமென்று அவரவர்கள் அடங்கிப் போய் ஆமைகளாகக் கிடக்கிறார்கள். இந்தக் கானகத்து மரமாளிகையில் சில நாட்கள் இலட்சிய வெறியுடன் உலவி, இறுதியில் இங்கேயே மண்ணோடு மண்ணாக வேண்டியதுதான் தன் வாழ்க்கையின் முடிவுபோலும் என்றெல்லாம் எண்ணியெண்ணி உறுமிக் கொண்டு, உறக்கத்தை வலிந்து வலிந்து கூப்பிட்டுக்கொண்டிருந்தான். முத்துநகையை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்ற ஆசை துளிர்த்தது. அவள் சிந்தும் அமுத மொழிகளைக் கேட்டுச் சற்று ஆறுதல் பெறலாம் என்ற எண்ணம் மேலோங்கிற்று. இந்தச் சூழ்நிலையில் அவள் என்ன பேசப் போகிறாள் என்று அறியவும் அவா எழுந்தது. வீரபாண்டியாகப் போகாமல் இருங்கோ