பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

235


ரோமாபுரிப் பாண்டியன் 235 முத்துநகையும் ஒரு நாள் சந்தித்துத் தங்கள் அன்பைப் பலப்படுத்திக் கொண்டார்கள். அந்த வழியே கணவனைத் தெய்வமென நம்பியிருக் கும் அரசி பெருந்தேவி சென்றாள். போகப்போக அரசிக்குக் களைப்பு அதிகமாயிற்று. மூச்சு வாங்க ஆரம்பித்தது; எங்கேயாவது சற்று இறங்கி இளைப்பாறிக் கொண்டால் தான் மேலே தொடர்ந்து செல்ல முடியும் என உணர்ந்து கொண்டாள். அவளுடைய ஆருயிர் கணவனும் முத்துநகையும் தங்கள் காதலை மலரவைத்த பாழ்மண்டபத்தைக் கண்டாள். அந்த மண்டபத்துக்கு மட்டும் பேசும் சக்தியிருந்தால், இருங்கோவேள்-முத்துநகை இருவரின் இன்பத் திருவிளையாடல்களைப் பற்றி பெருந்தேவியிடம் கோள் மூட்டியிருக்கும். அவள் குதிரையிலிருந்து மெல்ல இறங்கி மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டாள். இருமல் தொந்தரவு துவங்கி விட்டது. அவளுக்கு உதவிசெய்ய, அருகில் யாருமே இல்லை. இருமி இருமித் தொண்டை யெல்லாம் வலியெடுத்து விட்டது. 'ஐயோ! அப்பா! அம்மா!' என்று வாய்விட்டு அலறினாள். விலாப்புறங்களில் சகிக்க முடியாத வலி; முதுகெலும்பெல்லாம் முறித்துப் போட்டது போன்ற வேதனை; கண்களிலிருந்து மழையெனக் கொட்டியது வேதனையின் சின்னம்! யாருடைய துணையுமின்றி அவளாகவே இருமிக் களைத்துப் போய்ச் சுருண்டு படுத்துக் கொண்டாள். தலைவரின் துணைவி படும் வேதனை யைப் பார்த்துக் கொண்டே அந்தக் குதிரை அசைவற்று நின்றது. அப்போது வெகு தூரத்தில் குதிரையொன்று வரும் குளம்படி ஓசை கேட்டது. அயர்வுடன் படுத்திருந்த பெருந்தேவி மெதுவாகக் கண்விழித் துக் குளம்படி ஓசை வரும் திக்கையே கவனித்துக் கொண்டிருந்தாள். ஆம்! குதிரைதான் - வர வர சத்தம் அண்மையில் கேட்கிறது. தன்னைத் தான் தேடிக் கொண்டு வருகிறார்கள் என்று பயந்து போனாள். எழுந்து நடக்க முடியாத அளவுக்கு உடல் நலிவு ஏற்பட்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் குதிரையில் தாவி ஏறிக் கொண்டாள். தன்னைத் தொடர்ந்து வரும் குதிரையிடம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது என்று திட்டமாகத் தீர்மானித்துக் கொண்டாள். பலங்கொண்ட மட்டும் குதிரை யைத் தட்டி ஓடச் செய்தாள்; குதிரை அரசியின் குறிப்பை அறிந்து கொண்டு இருளைக் கிழித்தவாறு போய்க் கொண்டிருந்தது. அரசியின் குதிரை சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மற்றொரு குதிரை மண்டபத்துப் பக்கம் வந்து நின்றது. அதன் மீது இருங்கோவேள் தான் அமர்ந்திருந்தான்.அவன் கையில் தீப்பந்தமொன்று இருந்தது. அந்த வெளிச்சத்தின் உதவியால், மண்டபத்திற்கு அருகே குதிரையொன்று நின்றிருந்த அடையாளத்தையும், அது புறப்பட்டுப் போன வழியையும்