22
கலைஞர் மு. கருணாநிதி
22 கலைஞர் மு.கருணாநிதி வரவேண்டுமென்ற ஆசை வளரத் தொடங்கிற்று. அதன் விளைவாக ரோம் நாட்டுப் பாராளுமன்றத்தினர் அந்தோணியை விரோதியென்று விளம்பரப் படுத்தினர். போர்க்கொடி இரத்தச் சாயத்துடன் விண்ணை எட்டியது! இரு பெரும் தீரர்களும் ரணகளத்தில் இறங்கினர். போர்க்களத்தில் புரண்டு கொண்டிருந்த அந்தோணிக்குப் போர்க்களம் உற்சாகம் வழங்கவில்லை. புறமுதுகிட்டுத் திரும்பினான். ரோமாபுரியின் முதலாவது மன்னர் மன்னனாக மணிமகுடம் அணிந்து கொண்டான் ஆக்டேவியஸ்! "மகிமை பொருந்திய மாவீரன்" என்ற வீர வாசகத்தின் சுருக்கமான பெயராக “அகஸ்டஸ்" என்ற பட்டத்தை ரோமாபுரிப் பாராளுமன்றம் ஆக்டேவியசுக்குப் பூரிப்போடு சூட்டி மகிழ்ந்தது. அகஸ்டஸ் சீசர் அரிமாவென நின்று ஆர்ப்பரித்தான் - அந்தோணியோ அந்தப்புரத்தில் சுருண்டு கிடந்தான். இந்த நிலைக்குரிய காலம் ஏறத்தாழ கி.மு.30 என்று கூறலாம். அந்தக் காலத்திலேதான் நமது பழம்பெரும் தமிழகத்தின் முப்பேரரசுகளின் கொடி நிழல் கொற்றம் தழைத்துக் கொண்டிருந்தது எனவும், சோழ மண்டலத்தில் திருமாவளவன் இரண்டாம் கரிகாற் பெருவளத்தான் ஆண்டு கொண்டிருந்தான் எனவும் வரலாற்றுப் பெரியவர்கள் வரையறுத்துள்ளார்கள். இந்தக் கரிகாலனின் காலம் கி.மு 60 முதல் கி.மு.10 வரை என்பதாகத் தமிழ்ச் சான்றோர் குறிப்பிடுகின்றனர். ரோமாபுரியிரே கோலோச்சிய அகஸ்டஸ் சீசரின்பால் பாண்டிய மன்னன் தனது தூதுவரை அனுப்பியிருந்தான் என்றும், அது கி.மு.20 என்றும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. அங்ஙனமாயின் அந்தத் தூதுவரை ரோமாபுரி அகஸ்டஸ் மன்னனிடம் அனுப்பி வைத்த பாண்டிய அரசன் யார்? இந்தக் கேள்விக்கு விடையினைக் கூறுவோர் பலவிதக் குழப்பங்களையே பதிலாகத் தந்திருக்கின்றனர், இதுவரையில்! கரிகால் பெருவளத்தானுக்குக் "குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமா வளவன்" என்ற ஒரு பெயருண்டு. இந்தப் பெயர் அவன் மறைந்த பிறகு இடப்பட்ட தாகும். இவன் திருவிடைக் கழி' அல்லது 'குராப்பள்ளி' என்னும் இடத்தில் உயிர் நீத்ததால் அப்பெயர் பெற்றான். இவனைப் பற்றிய புறப்பாட்டு ஒன்றைப் பாடிய காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் எனும் புலவர், அந்தப் பாட்டில் பாண்டிய மன்னன் ஒருவனையும் இணைத்துப் பாடியிருக்கிறார். அந்த மன்னனின் பெயர் பெருவழுதி. இவன் "வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி" என்று அழைக்கப்பட்டான்; மறைந்த பிறகு! "நீ அறந்தங்கும் உறையூரின்கண் அரசன்; இவனோ தமிழ் குலுங்கும் மதுரையில் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன் ! நீ, தண்புனல் காவிரிக்கு