240
கலைஞர் மு. கருணாநிதி
பெருந்தேவி, அரண்மனைக்குள் எப்படி நுழைவது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அரண்மனையிலுள்ளோர் பரபரப்புடன் எழுந்து ஒளி பொருந்திய முகங்களுடன் அங்குமிங்கும் ஓடியாடி ஏதோ ஒரு குறிப்பிட்ட அலுவலில் ஈடுபட்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டன. மகர தோரணங்கள் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டன. மண்டபங்களை விழாக் கூடங் களாக்கிடும் முயற்சியில் வீரர்கள் தீவிரங்காட்டினர். மன்னர் பெருமானின் கொலு மண்டபம் என்றுமில்லாத தனி அழகுடன் விளங் கிட வேண்டுமென்று அமைச்சர் கட்டளையிடவே அத ஆணையைச் சிரமேற்கொண்டு வீரர்கள் பணி புரிந்தனர். புலிக்கொடித் தோரணங்கள் அசைந்தாடிக்கொண்டிருந்த காட்சி கண்டு அரண்மனைக் குள்ளே வாழ்பவர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர். "தமிழ் காக்கும் தங்கமே! வருக!" எனும் வரவேற்பு வளைவுகள் காலைக் கதிரவனின் ஒளிபட்டுத் தகதகவென மின்னிக் கொண்டிருந்தன. கரிகால் மன்னன் அதிகாலையிலேயே எழுந்து கொலு மண்டபத்திற்குப் புறப்படுவதற்குத் தயாராகிவிட்டான். பூம்புகார்த் தலைநகரின் கொலுமண்டபத்தில் அமர்வதென்றால் கரிகாலனுக்குத் தனி உற்சாகம். பூம்புகாரில் இருந்தவாறே உறையூருக் கும் அரசனென விளங்கும் புகழ் படைத்தவனன்றோ சோழப் பெருமன்ன னாம் - திருமாவளவன் கரிகாலன்! கொலுமண்டபத்தில் பூம்புகார்த் தலைநகர மாந்தரும்- உறையூர் நகர மாந்தரும் வந்து நின்று தங்கள் விருப்பங்களை வெளியிடும்போது கரிகாலனுக்கு நெஞ்சு புடைக்கும். தான் விளைத்த வீரத்தை எண்ணிப் பூரிப்படைவான்! தன்னால் உருவாகிவிட்ட சோழப் பேரரசு நீண்ட நெடுங்காலம் வலுவிழக்காமல் வாழ வேண்டுமென்று அவன் விரும்பியிருந்தான். அவனைப் புகழாத புலவர்கள் அந்தக் காலத்தில் இல்லை. பத்துப்பாட்டு அழைக்கப்படும் பழந்தமிழ் இலக்கியத்தில் பட்டினப் பாலையும், பொருநராற்றுப்படையும் அவனது சிறப்பை வானளாவப் புகழ்ந்து கூறுகின்றன. “காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிப் என