பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

241


ரோமாபுரிப் பாண்டியன் பிறங்கு நிலைமாடத்து உறந்தை போக்கிக் கோயிலொடு குடி நிறீஇ." . , . 241 என்று, அவன் செய்த பெருஞ் செயல்களை வர்ணிக்கிறது பட்டினப்பாலை. உலகமெல்லாம் மழை மறுத்துப் பஞ்சம் வந்த போதும், சோழமன்னன் தன் செங்கோல் அறத்தாலே பொன்னிமா நதியின் துணைகொண்டு பொன் கொழிக்கும் நாடாகவே சோழநாட்டை ஆக்கிடுவான்; கரும்பாலைகளிலே எழுகின்ற புகை, நீர் நிறைந்த இடத்தில் செழித்துள்ள நெய்தற் பூவையும் வாடச் செய்யும். தென்னை, வாழை, கமுகு, மஞ்சள்,மா, சேம்பு, இஞ்சி முதலியன பயன் கெழுமி நிறைந்த குலைகளுடனும் கிழங்குகளுடனும் நிற்பதைச் சோழ நாடெங்கும் காணலாம். உப்பங்கழிகளிலே - நிரல்படக் குதிரைகளைப் பிணைத்தாற் போன்று தறிகளிலே பிணைக்கப்பட்ட படகுகளையும், புலி இலச்சினை செதுக்கப்பட்ட பெரிய கதவுகளை உடைய இல்லத்தில் உள்ள அடுக்களையில் சோறு வடிப்பதால் ஒழுகிய கொழுங்கஞ்சி தெருவிலே ஆறுபோல ஓடுகின்ற நிலைமையையும் வளத்தையும் சித்தரித்துச் செந்தமிழ் நாட்டின் பழைய நிலைமையைக் கூறுவதே பட்டினப் பாலை இதன் பாட்டுடைத் தலைவன் கரிகால் திருமாவளவனே தான். சோழ நாட்டுப் பெருமைகளையும் சோழ மன்னனின் ஆற்றலையும் புகழ்ந்திடும் மற்றொரு இலக்கியந்தான் பொருநராற்றுப் படையாகும். பட்டினப்பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். இந்தத் தமிழ்ப் பாவலர் 'பட்டினப் பாலை' 'பெரும் பாணாற்றுப் படை' என்னும் இருபெரும் கருவூலங்களைத் தமிழகத்துக்குத் தந்தவர்; இவருடைய 'கண்ணனார்' என்னும் பெயருக்கு முன் வந்துள்ள கடியலூர் என்பது அவருடைய ஊரைக் குறிப்பதாகும். உருத்திரன் என்பது அவரது தந்தையின் பெயர். பட்டினப்பாலை மூலம் கரிகாலனின் அறவழி ஆட்சியை விளக்கிக் காட்டி, கடியலூர் உருத்திரங்கண்ணனார் மன்னனின் அன்புக்குப் பெரிதும் பாத்திரமாகிவிட்டார். அந்த அன்பின் அடையாளமாகக் கரிகாலன், கண்ணனாருக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் வழங்கினான் என்று வரலாறு முழங்குகிறது. பொருநராற்றுப் படை இயற்றிய முடத்தாமக்கண்ணியார் கரிகாலனின் நாட்டு வளத்தையும், ஆற்றல் அறிவு ஆகியவற்றையும் இலக்கியத்தில் ஏற்றிய பெருமைக்குரியவராவார். இரு புலவரில் முதலில் கூறப்பட்ட பட்டினப்பாலை ஆசிரியருக்குப் பரிசு அளிக்கும் விழாதான் அன்று பூம்புகார் அரண்மனையில் நடக்க இருந்தது. அதனால்தான் அரண்மனை ஆட்கள் பரபரப்புடன் வேலை களைக் கவனித்தனர். மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து