ரோமாபுரிப் பாண்டியன்
251
ரோமாபுரிப் பாண்டியன் 251 "எப்படியாவது காரிக்கண்ணனாரைச் சந்தித்தே தீர வேண்டும்!" என்று நெடுமாறனிடம் பரபரப்புடன் கூறினார். அன்பும் அமைதியும் நிறைந்த காரிக்கண்ணனாரின் கண்களில் வஞ்சம் ஒளிந்திருந்தது எப்படி எனச் சிந்திக்கத் தொடங்கினார். "தளபதி நெடுமாறா! பட்டினப்பாலையை இயற்றி முடிந்ததும் கரை காணா இன்பம் கொண்டேன். அதனை அரசர் முன்னே பாடிக்காட்டிய தும் என் பிறவிப் பயனை அடைந்துவிட்ட மகிழ்ச்சியுற்றேன். பொன்னை யும் மணியையும் திருமாவளவர் வாரி வழங்கியதும் என் தமிழ் நெஞ்சம் விம்மி உயர்ந்தது. 'வாழ்க தமிழ்!' என்று உரக்கக்கூவிய ஒலி என் காதுகளுக்கு மட்டுமே கேட்டது. என்னை நான் மறந்தேன். அந்தச் சமயத் தில் மின்னலெனத் தோன்றிய குழப்பம் - கொலை வெறி அனைத் தும் சேர்ந்து என் உயிரைக் கொத்தித் தின்னத் தொடங்கின. அந்த வேதனை யைக் கூடச் சகித்துக் கொண்டேன், பேரரசர் பிழைத்துக் கொண்டார் என்பது கண்டு!. ஆனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு நேர் எதிர்ப்பாக... நான் பெற்ற வேதனைகளுக்குச் சிகரமாக அமைந்துவிட்டது காரிக்கண்ணனார் பற்றிய செய்தி. இதுபற்றி எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். அதற்குவழி செய்தாக வேண்டும்" என்று நெடுமாறனிடம் தன் உள்ளத்தைத் திறந்து காட்டினார் உருத்திரங்கண்ணனார். கிக் "புலவர் அவர்களே! கொஞ்சம் பொறுத்திருங்கள். அமைதியின்றித் தவித்துக் கொண்டிருக்கும் அரசரின் மனம் ஒரு நிலைக்கு வரட்டும். தன்னைக் கொல்ல வந்த பெருந்தேவிக்கு அவர் நடத்த இருக்கும் ஈமச்சடங்குகள் முடிவு பெறட்டும். அதன் பிறகு அவரை அணு காரிக்கண்ணனார் பற்றி விசாரிக்கலாம் என்று நெடுமாறன் பதில் கூறிவிட்டு, அவரையும் அழைத்துக் கொண்டு தான் தங்கியிருக்கும் இடம் நோக்கி நடக்கலானான். புலவரும் நெடுமாறன் சொல்வது சரிதான் என்று ஒப்புக் கொண்டவராய் அவனுடன் புறப்பட்டார்.