பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

கலைஞர் மு. கருணாநிதி


பூம்புகார் நகரத்து மக்களும் புயலென உள்ளம் படைத்து ஓரிடத்தில் உட்காரவோ நிற்கவோ முடியாதவர்களாக நகரத்து வீதிகளில் அலைந்து கொண்டிருந்தனர். இருங்கோவேள் மன்னன் மீது உடனே படையெடுத் தாக வேண்டும் என்ற உணர்ச்சி காட்டுத்தீ போலச் சோழர் தரணியெங் கும் பரவிவிட்டது. இனியும் அந்தப் பகைவனைப் பதுங்கி வாழ்வதற்கு அனுமதித்தால் கரிகால் மன்னரைக் காப்பாற்றுவது என்பது முடியாத காரியம் ஆகிவிடும் என்று அவர்கள் முடிவு கட்டிக் கொண்டார்கள். கோலமாப்போன்ற நரைத்தலைக் கிழடுகள் முதல் குழந்தைகள் வரையில் அனைவருமே கரிகால் மன்னரை நினைத்து நினைத்துத் தேம்பி அழுதனர். தங்கள் தலைவனைத் தங்களிடமிருந்து யாரோ பிரித்துவிடப் போகிறார்கள் என்ற பயம் அவர்களை நிலை தடுமாறச் செய்தது. சோழ நாட்டில் உள்ள படைகளின் முன்னே இருங்கோவேளின் படை எம்மாத்திரம்? அப்படியே இந்தப் படைகள் போதாது என்றால். பாண்டியத் தளபதி நெடுமாறன் வேறு படைகளோடு வந்திருக்கிறார். அதுவும் போதவில்லையெனில் பாண்டிய நாட்டில் மிச்சமுள்ள வீரர்களும் அழைத்தவுடன் அனுப்பப்படுவர். இவ்வளவு வலிமை இருந்தும் எதற்காக இன்னும் தயக்கம் காட்ட வேண்டும் என்று சோழ நாட்டு மக்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள். 14 "கையாலாகாத கோழை! வாள் பிடிக்கத் தெரியாத வஞ்சகன்! நேர் நின்று போர் புரிய ஆற்றல் அழிந்து தன் மனைவியை அனுப்பிப் பகை முடிக்க நினைத்திருக்கிறான் படுபாதகன்." -இப்படிப் பேசியது ஒரு கூட்டம். "அனுப்பியதுதான் அனுப்பினானே, யாராவது ஓர் ஆண் மகனை அனுப்பியிருக்கக்கூடாதா? நோயால் மெலிந்த தன் நோஞ்சான் மனைவியை அல்லவா சூதாட்டக்காயாகப் பயன்படுத்தியிருக்கிறான்? இவனுக்கு ஏன் கையிலே வாள்? இவனுக்கு ஏன் மீசை? இவனுக்கு ஏன் மன்னன் பட்டம்? வீரன் என்ற விருது?” ஆத்திரம் கலந்த வாசகங்கள் பூம்புகார் மக்களிடமிருந்து வெளிக்கிளம்பின. வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வந்த களைப்பால் பெருமூச்சு விட்டுக் கரையில் சாய்ந்து உடனே வேலைக்கு ஓடும் கடலின் அலைகள் கூடக் கொஞ்சம் மெதுவாக எழுந்தன. ஆனால்