ரோமாபுரிப் பாண்டியன்
257
ரோமாபுரிப் பாண்டியன் 257 "ஏன் அழுகிறாய்? உன்னுடைய மன்னன் சாவதற்கு விரும்புகிறானே என்றுதானே? அழாதே! நான் இருங்கோவேளின் மனைவி பெருந்தேவியின்மீது கொண்டுள்ள மரியாதையின் காரணமாக இதைச் சொன்னேன். நீ பார்த்தாயா அந்த அரசியின் உடல்நிலையை? பார்த்திருக்க முடியாது. உன் கவனம் முழுவதும் என்னைக் காப்பாற்று வதிலேயே போயிருக்கக்கூடும். நோயினால் தேய்ந்து போனவள்; அணு அணுவாக நோய்க்கிருமிகளுக்கு தன் உயிரைத் தந்து கொண்டிருப்பவள்; அவளுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு வலிமை? தியாக உள்ளம் தந்த வலிமைதான் அது! அந்த உள்ளம் உடைந்து விடலாமா? உடையக் கூடாது, உடையும்படி செய்துவிட்டோம் நீயும் நானும். எப்படி என்று கேட்கிறாயா? நீ காப்பாற்றினாய். நான் பிழைத்துக் கொண்டேன். நாமிருவரும் இந்தத் தவற்றினைச் செய்யாவிட்டால் அந்த உத்தமியின் இலட்சியம் நிறைவேறியிருக்கும்.
"பெருந்தேவியின் சவத்தை என்ன செய்தீர்கள்?" 'அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்ய உத்தேசித்திருக்கிறேன்." 'அவள் செத்துவிட்ட செய்தியையாவது இருங்கோவேளுக்குச் சொல்லி அனுப்பினீர்களா?" “ஏன்?” துக்கம் விசாரிக்க அந்தத் துரோகி வருவான். அப்போது அவனைப் பிடித்துக்கொள்ளலாம் என்றுதான்." 14 'அந்தப் போர் முறையை நான் படித்ததில்லையே!" "மன்னித்து விடுங்கள்." உழவன் கண்களை மூடிக் கொண்டான். கொண்டு கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மைகளை மீறிக் உழவ! உணர்ச்சி வயப்பட்டு உடலை அலட்டிக் கொள்ளாதே! இந்தச் சமயத்தில் அதிகமாகப் பேசுவது கூடத் தவறுதான். ஆனாலும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல். என் சரித்திரத்தில் அழியாத இடம் பெற்று விட்ட உன் பெயர் என்ன?" என்று மிக்க ஆவலுடன் கரிகாலன் உழவனைப் பார்த்துக் கேட்டான். கன்னங்களில் கண்ணீரை வழிய விட்டுக் கொண்டே உழவன் பதில் சொன்னான். "அவன் பெயர் வளவன்." அந்தப் பெயரை மன்னன் வாய் நிறையச் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.