பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

கலைஞர் மு. கருணாநிதி


258 கலைஞர் மு. கருணாநிதி பிறகு வளவனைப் பார்த்து, "பெருந்தேவியின் இறுதிச் சடங்குகளுக் கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியிருக்கும். நான் போய் அவைகளைக் கவனிக்கிறேன். நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள். உன் மன்னனுக்கு இனிமேல் எந்தவித ஆபத்தும் நேராது. மனத்தைக் குழப்பிக் கொள்ளாமல் தைரியமாக இரு!' என்று கூறிவிட்டுக் கிளம்பினான். அவன் சொன்னவாறே பெருந்தேவியின் சவ அடக்கத்திற்கான காரியங்களில் அரண்மனையிலுள்ளோர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். என்ன இருந்தாலும் ஒரு மன்னனின் மனைவி என்ற மரியாதையுடன் அந்தக் காரியங்கள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட பீடமொன்றில் பெருந்தேவியின் சடலம் வைக்கப்பட்டிருந்தது. அவள் முகத்தைத் தவிர மற்ற அங்கமனைத்தும் மலர்களால் மூடப்பட்டிருந்தது. கூடம் முழுவதும் நறுமணப் புகை சூழ்ந்திருந்தது. பெரியதோர் சாதனை புரியவந்த தோற்றமும் அந்தக் காரியத்தில் ஏற்பட்ட தோல்விச் சாயலும் பெருந்தேவியின் முகத்தில் குடிகொண்டிருந்தது. அவளுக்கு இப்போது நிம்மதி! அரண்மனையிலே பிறந்து. அரண்மனையிலே வாழ்ந்து, இறுதியில் ஆரண்யத்தில் செத்துக்கிடக் காமல் அரண்மனையிலேயே முடிவெய்திவிட்டாள். ஆனாலும் அந்தச் சாவு, அவளுக்குப் பரிபூரணத் திருப்தியை அளிக்கக் கூடியதாக இல்லை! நிச்சயமாக இல்லை? அவளருகே அவளது உயிரனைய கணவன் இருங்கோவேள் இல்லை . அவன் அவளது பிரிவை நினைத்து உகுத்தி டும் கண்ணீர்த் துளிகளில் அன்றோ அவள் கடைசியாகக் குளித்திருக்க வேண்டும்? அதற்குக் கொடுத்து வைக்கவில்லையே! அது மட்டுமா " அண்ணி! அண்ணி!” என்று அன்பைக் குழைத்துப் பேசும் அவள் பிரியத்துக்குரிய தாமரையும் அருகே இல்லை அனாதைபோல் இறந்து கிடந்தாள். அரண்மனைக் கூடத்தில்; அதுவும் பகைவனின் வீட்டில்! சவம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குக் கரிகாலன் வந்து சேர்ந்தான். பெருந்தேவியின் முகத்தையே உற்றுக் கவனித்தவாறு நின்று கொண்டி ருந்துவிட்டுத் தாழ்வாரத்துப் பக்கம் வந்து அங்குமிங்கும் உலவிடத் தொடங்கினான். அரசனிடமிருந்து என்ன கட்டளை பிறக்குமோ என்று அமைச்சர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அதன்படியே அரசனும் அமைச்சரை நோக்கி, “இந்தச் செய்தியை இருங்கோவேளுக்குத் தெரிவிக்க வேண்டாமா?" என்று கேட்டான். "இந்நேரம் இது இருங்கோவேளுக்குத் தெரியாமலா இருக்கும்? அவன்தானே அனுப்பி வைத்திருக்கிறான். அதனால் அவனுக்கு இதுவரையில் செய்தி எட்டாமல் இருக்காது" என்று அமைச்சர் பதில் சொன்னார்.