260
கலைஞர் மு. கருணாநிதி
260 கலைஞர் மு.கருணாநிதி "மனைவியின் முக தரிசனம் காணவரும் பாவனையில் தங்களுக்கு ஏதாவது தீங்கு செய்துவிட்டால்...?" "அவ்வளவு மோசமான நிலை உருவாகுமென்றால் நான் சாவதே மேல். தன்னந் தனியாக அரண்மனைக்குள்ளே ஒருவன் வருவான். என்னைச் சுற்றிப் பெரும் பாதுகாப்புப் படை இருக்கும். வருகிறவன் இவ்வளவையும் மீறி, என்னைக் கொன்று போட்டுவிடுவான். அப்படித் தானே அமைச்சரே? அதுபோல் நடக்குமென்றால் நமக்குப் படைகளே தேவையில்லை. இப்போதே கலைத்து விடலாம்." 'மன்னிக்கவும் அரசே! நான் அதற்குச் சொல்லவில்லை. நாட்டு மக்கள் யாருக்குமே பிடிக்காத ஒன்றை ஏன் செய்ய வேண்டும் என்றுதான்..." 'கொல்ல வரும் எதிரியிடமும் கரிகாலன் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டான் என்ற செய்தி நாட்டு மக்களுக்குச் செந்தீயாக இருக்குமென்கிறீர்! நல்ல வேடிக்கை! அங்ஙனமாயின், எதிரி என்பதற் காகக் கரிகாலன் மனிதப் பண்பையும் இழந்து நடந்து கொண்டான் என்ற பெயர் எனக்கு வரவேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள் போலும்!" கோபமாக இருக்கிறான் என்பதை அமைச்சர் கரிகாலன் புரிந்துகொண்டு மெளனமாக இருந்தார். "அமைச்சர் அவர்களே! இப்போதே நமது வீரர்களை அனுப்புங்கள். இருங்கோவேள் ஒளிந்து வாழ்வதாகச் சந்தேகப்படும் இடங்களில் எல்லாம் பறை முழக்கச் சொல்லுங்கள்! இருங்கோவேள் துணைவி பெருந்தேவியின் மறைவைப் பற்றிப் பறை முழங்கட்டும் ! நமது அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள சவத்தைக் காண்பதற்கு இருங்கோ வேள் மட்டும் தன்னந்தனியாக வர யாதொரு தடையுமில்லை என்று செய்தி பரவட்டும். இன்று-நாளை -நாளை மறுநாள் மாலை வரையில் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்படாமல் இருங்கோவேளுக்காக எதிர்பார்ப்போம் என்றும் விளக்கமுரைக்கட்டும் உடனே ஏற்பாடு செய்யுங்கள். அதுவரையில் சவம் சிறிதும் கெடாமல் தைலங்களால் பாதுகாக்கப்படட்டும், மற்ற ஏற்பாடுகளை ஒத்தி வையுங்கள்." அரசனின் ஆணை பிறந்ததும் அதுபற்றி எந்தப் பதிலும் கூறாமல் அமைச்சர் தலை வணங்கி விட்டு நகர்ந்தார். அப்போது, தளபதி அங்கு வந்து நின்று வணங்கினான். தளபதியிடம் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. "நாட்டு மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். இருங்கோவேள் வரும்போது எந்தவிதமான எதிர்ப்பும் காட்டக்கூடாது. அவனுடைய உயிருக்கோ மரியாதைக்கோ ஏதாவது ஊனம் ஏற்பட்டால் அதற்கு