பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

கலைஞர் மு. கருணாநிதி


24 கலைஞர் மு. கருணாநிதி னாம். முசிறிக்குத் தெற்காக இருக்கும் குளச்சல் என்னுமிடத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மூழ்கி எடுத்த முத்துக்களும் ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. டாலமி என்பவன், ரோமுடன் தொடர்பு கொண்டிருந்த தமிழ்நாட்டுத் துறைமுகங்களில் ஒன்றாக "கொபெரிஸ்" துறைமுகம் என்ற ஒரு பெயரையும் எழுதிக்காட்டுகிறான், காவிரிப்பூம்பட்டினத்தையே அவ்வாறு அழைத்திருக்கக் கூடுமெனக் கூறுவர் அறிஞர். அவன் "புடோக்கி” என்று ஒரு துறைமுகத்தைக் குறிப்பிடுகிறான். அது அநேகமாகப் புதுவையாக இருக்கவேண்டுமெனக் கூறுகிறார்கள். பாண்டிநாட்டுக் கொற்கைப் பெருந்துறைக்கு அருகில் முத்துக்களும், சங்குகளும் மிக அதிகமாகக் கிடைத்து, அவைகள் உலகில் எல்லாப் பகுதியினராலும் பாராட்டப் பெற்றன. கொற்கை முத்துக்கு ஈடு இணை இல்லையென்பதை "மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையும் பெருந்துறை முத்து என்ற அகப்பாட்டு அழகுற விளக்குகிறது. முத்தும், நுண்ணிய பருத்தி ஆடைகளும், எலிமயிராலும், பட்டாலும் நெய்யப்பட்ட உடைகளும். ரோமாபுரி போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு. அங்கிருந்து குதிரைகளும், மதுவகைகளும், கண்ணாடிச் சாமான்களும் கொற்கைப் பெருந்துறையில் வந்து இறங்கியவண்ணமிருந்தன. அழகாக கப்பல்களில் தங்கத்தை ஏற்றிக்கொண்டு யவனர்கள் வருவார்களாம். பிறகு மிளகை ஏற்றிக்கொண்டு திரும்புவார்களாம். முசிறித் துறை முழுவதும் அந்தக் கப்பல்களின் பேரொலி கேட்கும் என்று சங்க இலக்கியங்கள் பெருமை பேசுகின்றன. புகார் துறைமுகத்தில் எல்லா நாடுகளைச் சேர்ந்த வணிகர்களும், மாலுமிகளும் வந்திறங்குவார்கள்; அவர்கள் எல்லோரும் ஒரே இனத்தவர் போல் ஒற்றுமையாகப் பழகுவார்கள் - என்று தமிழிலக்கியம் கூறுகிறது. யவனர்கள் பலர் தமிழ் மன்னர்களின் மெய்க்காப்பாளர்களாகவும் இருந்திருக் கின்றனர் என்ற செய்தியொன்றே இருசாராரிடையிருந்த நல்லெண்ணத்தை விளக்கும் கண்ணாடியாகும். இத்தகைய தொடர்புகளை இன்று மெய்ப்பித்துக் காட்டுவது போலப் புதுவை மாநகருக்குப் பக்கத்தில் "அரிக்கமேடு" என்னுமிடத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில் ரோமானியருக்குரிய பலவகைப் பொருள்கள் கண்டெடுக்கப் ட்டுள்ளன. அவர்கள் உபயோகித்த பாத்திரங்கள், விளக்குகள், நாணயங்கள் போன்ற பலவற்றைத் தமிழகத்தில் காணமுடிகிறது. அரிக்கமேட்டில் சில சிறுவர்கள் அகஸ்டஸ் சீசரின் உருவம் பதிக்கப்பட்ட ஒரு விலை உயர்ந்த கல்லைக் கண்டெடுத்தனர். ஆனால் அது இப்போது காணாமல் போய்விட்ட தாகச் சொல்லப்படுகிறது.