பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

261


ரோமாபுரிப் பாண்டியன் 261 முழுப்பொறுப்பும் தளபதியாகிய நீயேதான். பூம்புகாருக்குள் நுழைந்து பெருந்தேவியின் முகத்தைப் பார்த்துவிட்டு பின்னர் பூம்புகாரை விட்டு வெளியேறிடும் வரையில்அவன் நமது பகைவன் என்ற கண்ணோடு யாரும் அவனைப் பார்க்கக் கூடாது. முதலில் மக்களை அமைதிப்படுத்து! அதுபோல் போர் வீரர்களுக்கும் கூறு!' கரிகாலனின் கம்பீரம் நிறைந்த வார்த்தைகளுக்குத் தளபதி பணிந்து நின்று மரியாதை செலுத்திவிட்டு அகன்றார். கரிகாலனுக்கு இப்போது ஒரு பெருமூச்சு! உழவன் வளவன் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது. 'அவள் செத்துவிட்ட செய்தியையாவது இருங்கோவேளுக்குச் சொல்லியனுப்பினீர்களா?" உழவன் கேட்டதற்குக் காரணம், இருங்கோவேள் வந்தால் அவனைப் பிடித்துக் கொள்ளலாம் என்றுதான்! அது போலத்தான் உழவன், மன்னனிடமும் பதில் கூறினான். வளவன் இருங்கோவேளைப் பிடிக்கக் கூறிய சூழ்ச்சி எண்ணத்திற்கு மன்னன் இணங்காவிட்டாலும், மனைவி இறந்த செய்தியைக் கணவனுக்கு சொல்லியனுப்ப வேண்டியதுதான் முறை என்ற எண்ணத்தை வளவனின் கேள்வியின் மூலம் பெற்றான். அந்த எண்ணத்தின் விளைவாகவே சவ அடக்கம் ஒத்தி வைக்கப் பட்டது. இருங்கோவேளுக்குச் செய்தி பரவிட வழி வகுக்கப் பட்டது. தங்கு தடையின்றி அவன் பூம்புகார் அரண்மனைக்குள் நுழைய அனுமதி தரப்பட்டது. இனி அவன் வரவேண்டியதுதான் பாக்கி.